மகாராஷ்டிரா மாநிலத்தில் கொலாபா மாவட்டத்தில் ககோடா என்னும் கிராமத்தில்
1895 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி பிறந்தவர் வினோபா பாவே.
இவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். அறப்போராளி. மனித உரிமைகள் ஆதரவாளர். பூமிதான இயக்கத்தின் தந்தையும் ஆவார்.
கதராடை தயாரிப்பு, கிராமத்தில் தீண்டாமை ஒழித்தல், கிராம மக்களின் கல்வி, சுதந்திரம், தொழில் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றிற்காக பாடுபட்டவர்.
பூதான் எனும் பூமிதான இயக்கத்தை தொடங்கிய இவர், பூமிதான இயக்கத்தின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார்.

13 ஆண்டுகள் நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான இடங்களுக்கு நடைபயணம் மேற்கொண்ட இவர், 40 லட்சம் ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்று உள்ளார்.
மேலும் பசுவதை தடை சட்டத்தை கொண்டு வருவதற்காக 1979 ஆம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்துள்ளார்.
“காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டவர் “என காந்திஜியால் புகழாரம் சூட்டப்பட்ட இவர், மக்களாலும் ஆச்சாரியா என்று போற்றப்பட்டுள்ளார்.
வினோபா பாவே தனது 87 வது வயதில் 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ம் தேதி காலமானார்.
வினோபா பாவே வின் மிகச்சிறந்த தேசிய சேவையை பாராட்டி அவரது மறைவுக்குப் பின் மத்திய அரசால் 1983 ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
எஸ். ராஜலெக்ஷ்மி