உலகம் சாதனையாளர்கள் மருத்துவம்

உயிரியல் ஆய்வாளரும் மருத்துவத்துக்கான நோபல் வென்ற எலிசபெத் ஹெலன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உயிரியல் ஆய்வாளரும் மருத்துவத்துக்கான நோபல் வென்ற எலிசபெத் ஹெலன் பிளாக்பர்ன் பிறந்த தினம் – நவம்பர் 26:

ஆஸ்திரேலியா, தாஸ்மானியா தீவின் ஹோபர்ட் என்ற இடத்தில் பிறந்தார் (1948). பெற்றோர், மருத்துவர்கள். இதனால் குழந்தைப் பருவத்தில் இருந்தே இவருக்கு அறிவியலில், குறிப்பாக உயிரியலில் ஆர்வம் பிறந்தது. 4 வயதில் குடும்பம் லான்செஸ்டன் என்ற நகரத்தில் சென்று குடியேறியது.

சிறுவர்களுக்கான அறிவியல் புத்தகங்களை ஆர்வத்துடன் படித்து வந்தார். குறிப்பாக சிறுமியாக இருந்தபோது மேரி க்யூரியின் வாழ்க்கை வரலாற்று நூலை மீண்டும் மீண்டும் படித்தார். அப்போதே தாம் ஒரு விஞ்ஞானியாக உருவாக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்.

அறிவுக்கூர்மை மிக்க மாணவியான இவர் பள்ளியில் படிக்கும்போது பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்டார். பியானோ வாசிப்பதில் மிகுந்த ஆர்வமும் திறனும் கொண்டிருந்தார். அப்போது இசைக்கலைஞராக வேண்டும் என்ற ஆசை அரும்பியது. ஆனால் அறிவியல் தாகம், இவரை விஞ்ஞான ஆய்வுகளில் மூழ்க வைத்தது.

1970-ல் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியலில் பட்டப் படிப்பும் அதையடுத்து முதுகலைப் பட்டமும் பெற்றார். 1975-ல் இங்கிலாந்து சென்ற இவர், அங்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பாக்டீரியாபேஜ் என்ற வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

Elizabeth Blackburn speaks at TED2017 – The Future You, April 24-28, 2017, Vancouver, BC, Canada. Photo: Bret Hartman / TED

அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் குரோமோசோம்கள், அவற்றின் அமைப்புகள் குறித்து ஆய்வை மேற்கொண்டார். மரபணு செல்களின் உறுதித் தன்மைக்குக் காரணமாக இருக்கும் டெலோமியர் (telomere) என்கிற முனைக்கூறுகளின் தோற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்விலும் ஈடுபட்டார்.

ALSO READ  ரஷ்யாவில் விமான விபத்து பயிற்சியில் ஈடுபட்ட 16 வீரர்கள் மரணம்

1977-ல் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியியல் துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு டெலோமியர் குறித்த தனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 1985-ல் இவரும் இவரது உதவியாளர் கரோல் டபிள்யு கிரைடல் என்பவரும் டி.என்.ஏ.விலிருக்கும் புதிய டெலோமியர்களை ஒன்றிணைத்து அவற்றின் நீள, அகலங்களைக் கட்டுப்படுத்தும் டெலோமெரிஸ் என்ற என்சைமை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்தனர்.

இந்த அபாரமான கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் உள்ள உயிரியலாளர் களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. இதனால் ஆராய்ச்சியாளர்களுக்கு டி.என்.ஏ.க்களைப் பற்றிய தெளிவான புரிதல் ஏற்பட்டது. மரபணு செல்களின் சிக்கலான செயல்பாடுகளையும் அவற்றின் மர்மமான இரட்டிப்பாக்கும் (replication) தன்மையைப் புரிந்துகொள்ளவும் இது வழிவகுத்தது.

இந்தத் தன்மையைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்கை டெலோமியர்களை உருவாக்கவும் இந்தக் கண்டுபிடிப்பு, தூண்டுகோலாக அமைந்தது. டெலொமியர் என்சைம்களைப் பிரித்தெடுத்த இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனை, இவருக்கு சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. நுண்ணுயிரியலுக்கான எல்லி லில்லி விருது 1988-ல் வழங்கப்பட்டது.

1990-ல் சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் (UCSF) நுண்ணுயிரியல் மற்றும் நோய்த் தடுப்பியல் பிரிவில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1993-ல் அந்தத் துறைத் தலைவராகவும் பணியாற்றினார். இதன் மூலம் இந்தப் பல்கலைக்கழக வரலாற்றிலேயே இந்தப் பதவியை அலங்கரித்த முதல் பெண்மணி என்ற புகழைப் பெற்றார். 1995-ல் டெலோமியர்களைக் குறித்த கட்டுரைத் தொகுப்பான டெலோமியர்ஸ் என்ற நூலை வெளியிட்டார்.

ALSO READ  பாரீஸிற்கு சென்ற சீனப்பெண்… கொரோனோ வைரஸை பரப்பினாரா?

2009-ல் தனது குழுவைச் சேர்ந்த கரோல் கிரெய்ட்டர், ஜாக் சொஸ்டாக் ஆகியோருடன் இணைந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றார். ஆராய்ச்சிகள், பேராசிரியர் பணியோடு, டெலோமியர்கள் மற்றும் புற்றுநோய் குறித்து இடைவிடாமல் உரையாற்றுவதிலும், கருத்தரங்குகள் நடத்துவதிலும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார்.

Elizabeth Helen Blackburn, (born 26 November 1948) is an Australian-American Nobel laureate who is currently the President of the Salk Institute for Biological Studies.

Elizabeth Blackburn speaks at TED2017 – The Future You, April 24-28, 2017, Vancouver, BC, Canada. Photo: Bret Hartman / TED

Previously she was a biological researcher at the University of California, San Francisco, who studied the telomere, a structure at the end of chromosomes that protects the chromosome. Blackburn co-discovered telomerase, the enzyme that replenishes the telomere. For this work, she was awarded the 2009 Nobel Prize in Physiology or Medicine, sharing it with Carol W. Greider and Jack W. Szostak, becoming the only Tasmanian-born Nobel laureate. She also worked in medical ethics, and was controversially dismissed from the Bush Administration’s President’s Council on Bioethics


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காஷ்மீர் பிரச்சினைக்கு போர் ஒருபோதும் தீர்வு ஆகாது?

Shanthi

தண்டனையில் இருந்து தப்பிக்க போலி இறப்பு சான்றிதழ்: எழுத்து பிழையால் சிக்கிய பரிதாப குற்றவாளி… 

naveen santhakumar

பாகிஸ்தானில் 14 பேர் மரணம்- பலர் மருத்துவமனைகளில் அனுமதி.

naveen santhakumar