சாதனையாளர்கள்

சுந்தர் பிச்சையின் சுவையான வாழ்க்கை பயணம்…!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராசன் (ஜூன் 10, 1972), இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில்நுட்ப மேலாளர் ஆவார். இவர் அல்பபெட் (Alphabet ) மற்றும் அதன் துணை நிறுவனமான  கூகுள்(Google) முதன்மை செயல் அலுவலர் ஆவார்.

சுந்தர் பிச்சை தமிழ் நாட்டில், மதுரை மாவட்டதில் பிறந்தார். இவரது தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார்.இவர் சென்னையில் உள்ள சவகர் வித்தியாலயா பள்ளியில் 10-ம் வகுப்பும், வனவாணி பள்ளியில் 12-ம் வகுப்பும் படித்தார். பிறகு IIT கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில், பொருளறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

இவர் IIT கரக்பூரில் படித்துக் கொண்டிருக்கும்போது அஞ்சலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காவ்யா மற்றும் கிரண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ALSO READ  அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச் சாதனை

பின்னர் 2004-ம் ஆண்டு Google-ல் இணைந்தார். இவர் கூகுள்(google) வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகுள்(google) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். 2013-ம் ஆண்டு மார்ச் 13-ம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு(android) பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார்.கூகுள்(google) வரைபடம், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம்(chrome), உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருந்தார்.

பிறகு,கூகுள்(google) உறவு நிறுவனங்களின் புதிய கூட்டு நிறுவனமான ஆல்பாபெட்டு(alphabet) உருவாக்கம் நிறைவுற்ற பிறகு, கூகுளின் முதன்மைச் செயல் அலுவலராகப் பொறுப்பேற்க உள்ளார். 2019-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி முதல் ஆல்பாபெட்டு என்ற நிறுவனத்தின் தலைவர்களாக இருந்த லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோர் விலகி இவரை இரண்டு நிருவனங்களுக்கும் ஒரே தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளார்கள்.அவருக்கு சுமார் 230 மிலியன் டாலர்கள் மதிப்புள்ள கூகிள் நிறுவனப் பங்குகள் தரப்பட்டதாக அதிகாரபூர்வ ஆவணங்கள் காட்டியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னை தரமணியில் பூட்டிய வீட்டில் லட்சக்கணக்கில் கொள்ளை

Admin

சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி – 1

News Editor

IRCTC இணையதளத்தில் ரயில் முன்பதிவு இறுதி நிலவரம் அறியலாம்: புதிய வசதி அறிமுகம்

Admin