சாதனையாளர்கள் தமிழகம்

கொரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: முடிதிருத்த தொழிலாளியின் மகள் ஐநா-வின் நல்லெண்ணத் தூதராக நியமனம்..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரை:-

பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்ட முடித்திருத்தும் தொழிலாளி மோகன் (47) மகள் நேத்ரா, வளர்ச்சி மற்றும் அமைதிக்கான ஐநா அவை (United Nations Association for Development and Peace) சார்பில் ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக (GoodWill Ambassador For The Poor) அறிவிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலமடையை சேர்ந்த மோகன் என்பவர் அதே பகுதியில் முடி திருத்தும்  தொழில் செய்து வருகிறார். 

ALSO READ  நரேந்திர மோடி உரையின் முக்கிய அம்சங்கள்... பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ஒதுக்கீடு..

இவர் ஊரடங்கின்போது ஏழை, எளிய மக்களுக்கு மகளின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த பணத்தி 5லட்சம் ரூபாய் மதிப்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார். 

முடி திருத்தும் தொழிலாளியின் இந்த மனிதநேயத்தை பிரதமர் மோடி கடந்த மே 31-ஆம் தேதி அனைத்திந்திய வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பாராட்டிப் பேசியிருந்தார்.

பிரதமரின் இந்த பாராட்டால் முடிதிருத்தும் தொழிலாளி மோகனும், அவரது மகள் நேத்ராவும் தேசிய அளவில் கவனம் ஈர்க்கப்பட்டனர். 

ALSO READ  பிரதமர் மோடி 'ஜெய் ஸ்ரீராம்' எதற்கு பதிலாக 'ஜெய் சியா ராம்' என்ற கோஷத்தை முழங்கியது ஏன்??.. 

தற்போது முடிதிருத்தம் தொழிலாளி மோகனுக்கும், அவரது மகளுக்கும் அடுத்த ஆச்சிரியமாக வளர்ச்சி மற்றும் அமைதிக்கான ஐ.நா அவை, முடி திருத்தகத் தொழிலாளி மோகன்தாஸின் மகள் நேத்ராவை ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக அறிவித்து டிக்ஸான் ஸ்காலர்ஷிப்-ஆக (DIXON SCHOLARSHIP) ரூ.1 லட்சத்தை பரிசுத்தொகையாகவும் வழங்கி கவுரவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

செய்திவாசிப்பாளர் வரதராஜன் மீது நடவடிக்கை- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.. 

naveen santhakumar

தொடரும் மாணவர்கள் தற்கொலை… சந்தேகத்தில் போலீஸ்…

Admin

தற்போது பள்ளித் திறப்பு இல்லை….முதல்வர் அறிக்கை….

naveen santhakumar