சாதனையாளர்கள்

9 வயது சிறுமியின் அறிவுத்திறனை டுவிட்டரில் பாராட்டிய பிரதமர் மோடி :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கல்பாக்கம்:

கல்பாக்கம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 4-ம் வகுப்பு பயிலும் சிறுமி, ஆகுமென்டல் ரியாலிட்டி தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி விலங்குகளின் விவரங்களை விவரித்து சமூகவலை தளத்தில் பதிவிட்ட வீடியோவை கண்டு ரசித்த பிரதமர் மோடி, சிறுமியின் அறிவுத் திறனை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வருபவர் அர்ஜுன். இவரது மகள் தான் சிறுமி இந்திரா(9).இவர், நகரியப் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துவருகிறார். கொரோனா ஊரடங்கு காரணத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், வீட்டிலிருந்த சிறுமி ஆகுமென்டல் ரியாலிட்டி தொழில்நுட்ப வகையில் உள்ள ஆப் ஒன்றை பயன்படுத்தி வீட்டு விலங்குகள் மற்றும் வனவிலங்குகள் குறித்து விளக்கும் வீடியோவை உருவாக்கியுள்ளார்.

ALSO READ  'கே.ஜி.எஃப் 2' படம் வெளியாகும் அன்று தேசிய விடுமுறை அறிவிக்க வேண்டும்..!

இந்த பதிவில் வீட்டின் அறையில் இருக்கும் இந்திராவின் அருகில் பசு, யானை, புலி, பாம்பு மற்றும் தேனீ உள்ளிட்ட உயிரினங்கள் வருவதைப் போல ஆகுமென்டல் ரியாலிட்டி தொழில்நுட்ப முறையில் காட்டப்படுகிறது.இச்சிறுமி அந்த உயிரினங்கள் குறித்து ஆங்கில மொழியில் விளக்கிப் பேசுகிறார். இந்த வீடியோ பதிவை, பெற்றோர்களின் உதவியோடு சமூக வளைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ பதிவை கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி பார்த்து ரசித்துள்ளார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோவை உருவாக்கியுள்ள சிறுமியின் அறிவுத்திறனை பாராட்டி டுவிட்டரில்  பிரதமர் பாராட்டியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சில மனிதர்கள்… சில நினைவுகள்(நூலக தாத்தா)பகுதி – 12

naveen santhakumar

சமூக உறவுகளின் சக்தி: டிஜிட்டல் யுகத்தில் வெற்றியைத் திறக்கிறது

News Editor

13 வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு:

naveen santhakumar