உலகம் சாதனையாளர்கள்

சரித்திரம் படைத்த ஆஸ்கர் பிஸ்டோரியஸ் பிறந்த தினம் – நவம்பர் 22:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சரித்திரம் படைத்த ஆஸ்கர் பிஸ்டோரியஸ் பிறந்த தினம் – நவம்பர் 22:

இரண்டு கால்களையும் இழந்த நிலையில், செயற்கைக் கால்களைக் கொண்டு ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் பங்குபெற்ற முதல் வீரர் என்கிற பெருமையோடு, 400 மீட்டர் ஓட்டத்தின் அரையிறுதிக்கு முன்னேறி சரித்திரச் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார், தென் ஆப்பிரிக்க வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்.

பதக்கம் வெல்வாரோ, இல்லையோ… ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதன் மூலமே புதிய சரித்திரம் படைக்கிறார் எனப் போற்றப்பட்டவர் தென் ஆப்பிரிக்க ஓட்டப் பந்தய வீரர்.

சிறு வயதிலேயே இரண்டு கால்களையும் இழந்துவிட்டவர், தன்னம்பிக்கையைக் கைவிடாமல் தன் இலக்கை நோக்கி ஓடத் தொடங்கினார். கார்பன் இழைகளால் செய்த மெலிதான செயற்கைக் கால்களால் ஓடுவதால் ‘பிளேடு ரன்னர்’ என்று அழைக்கப்படுகிறார்.

லண்டன் ஒலிம்பிக்ஸுக்குத் தகுதிபெற்றபோது, தனது வாழ்க்கையில் பெருமைக்குரிய தருணங்களில் இதுவும் ஒன்று எனக் கூறிய 25 வயதான பிஸ்டோரியஸ், மாற்றுத் திறனாளிகளுக்கான ‘பாராலிம்பிக்ஸ்’ போட்டிகளிலும் பங்கேற்று இருக்கிறார்.

ALSO READ  கொரோனா தடுப்பூசி இலவசம்-பிரான்ஸ் பிரதமர்

முன்னதாக, ஒலிம்பிக்கில் தேர்வு செய்யப்படுவதற்கே பெரும் போராட்டத்தைச் சந்தித்தார் ஆஸ்கர் பிஸ்டோரியஸ். செயற்கைக் கால்களைப் பொருத்திக்கொண்டு ஓடும் பிஸ்டோரியஸ், மற்ற போட்டியாளர்களுடன் ஓடும்போது, சாதகமான நிலையைப் பெறுகிறார் என்ற புகார் எழுந்தது. அந்தப் புகார், விளையாட்டுத் துறைக்கான சர்வதேசத் தீர்ப்பாயத்தால் நிராகரிக்கப்பட்டு இப்போது ஒலிம்பிக்கில் கலந்துகொள்கிறார்.

ALSO READ  இஸ்ரேலில் 1000 ஆண்டுகள் பழமையான நாணயங்கள் கண்டுபிடிப்பு:

பிஸ்டோரியஸுக்கு வாழ்த்துகள்!

Oscar Leonard Carl Pistorius; born 22 November 1986 is a convicted murderer and South African sprint runner. Both of Pistorius’ legs were amputated below the knee when he was 11 months old. He was the tenth athlete to compete at both the Paralympic Games and Olympic Games, competing in sprint events for below-knee amputees in Paralympic events, and in non-disabled sprint events.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவிலும் கனடாவிலும் தனது விற்பனையை நிறுத்துகிறது நூற்றாண்டு பாரம்பரிய J&J நிறுவனம்…

naveen santhakumar

திக் திக் நொடிகள்- தூ என்று துப்பிய திமிங்கலம்; உயிர் பிழைத்த அதிசயம் …!

naveen santhakumar

ஆப்கானிஸ்தான் தலைநகரை நெருங்கியது தலிபான் படைகள் :

Shobika