சாதனையாளர்கள் லைஃப் ஸ்டைல்

சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி – 2 (பாசமலர் காட்டிய வழி)

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தான் பார்த்த, பழகிய,நேசித்த, கற்றுக் கொண்ட, கொண்டாடிய மனிதர்களை ,அவர்களுடனான தன் நினைவுகளை மூத்த பத்திரிக்கையாளர் எம்.ஜெ. பிரபாகர் பகிர்ந்து கொள்ளும் தொடர் இது.

தோழர் எம்.ஜெ. பிரபாகர்

தற்போதைய தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு பெற்றோர்களுடன் வசித்து வந்தோம்.எனது மூத்த சகோதரி வசந்தா.

தோழர் ரீடா, தோழர் எம்.ஜெ.பிரபாகர், தோழர் வசந்தா

மதுரை லேடி டோக் பெண்கள் கல்லூரியில் முதுநிலை தமிழ் பட்டம் பெற்றவர்.இவரது திருமணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தொழிற்சங்கத் தலைவர் தோழர் வி பி சிந்தன் முயற்சியில் நடைபெற்றது.

தோழர் வி பி சிந்தன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முகவை (தற்போதைய விருதுநகர் ராமநாதபுரம் சிவகங்கை மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது) மாவட்ட செயலாளராக இருந்த தோழர் எஸ் ஏ பெருமாள் அவர்களை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.மதுரை மாநகரின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் ஏ பாலசுப்பிரமணியம் தலைமையில் வசந்தா எஸ் ஏ பெருமாள் திருமணம் 11.02.1979 இல் நடைபெற்றது.

தோழர் வசந்தா, தோழர் எஸ்.ஏ. பெருமாள்,

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு போடிநாயக்கனூரில் ஆங்கிலம் தமிழ் தட்டச்சு பயின்று வந்தேன். அத்தோடு ஆங்கில சுருக்கெழுத்து பயிற்சியும் மேற்கொண்டேன். தமிழ் ஆங்கிலம் தட்டச்சு பயிற்சியில் முது நிலையும் ஆங்கில சுருக்கெழுத்து பயிற்சியில் இடைநிலை தேர்ச்சி பெற்றிருந்தேன் .சகோதரியின் முயற்சியில் மதுரை மாநகருக்கு வரவழைக்கப் பட்டேன்.வேலைவாய்ப்புக்கு முயற்சி செய்யலாம் என்ற நிலையில் என்னை அவர் மதுரைக்கு அழைத்திருந்தார்.

தோழர் எம்.ஜெ.பிரபாகர் , தோழர் வசந்தா

பாசமலர் அழைப்பை ஏற்று மதுரை வந்தடைந்தேன். வேலைவாய்ப்பு பெறும்வரை மதுரை மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள மோட்டார் யூனியன் என்ற தொழிற்சங்க அலுவலகத்தில் தட்டச்சு செய்யும் பணியினை மேற்கொள்ளுமாறு தோழர் பெருமாளும் பாசமலரும் பணித்தார்கள்.இங்குதான் எனது பணியின் அடுத்தகட்ட இலக்கை நோக்கி பயணமானது.இந்திய தொழிற்சங்க மையத்தின் இணைப்பான மதுரை மோட்டார் யூனியன் மதுரை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் போக்குவரத்து துறையில் பணி புரியும் ஊழியர்களுக்கான தொழிற்சங்க பிரச்சனைகளை சட்ட ரீதியாக தீர்த்துவைக்கும் அமைப்பாக செயல்பட்டு வந்தது. தோழர் எஸ் மன்னார்சாமி இச்சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்து தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை நிர்வாகத்தோடு பேசி சட்டரீதியாக நிவாரணம் தேடி தந்து கொண்டிருந்தார்.

ALSO READ  மணப்பெண் கேட்ட ‘100 பரிசுகள்’ : வாங்கி கொடுத்து அசத்திய மாப்பிள்ளை
தோழர். மன்னார்சாமி

தொழிற்சங்க அலுவலகத்தில் எனது பணி

தொழிலாளர்கள் கொண்டுவரும் பிரச்சினைகளை தோழர் மன்னார்சாமி படித்துப் பார்த்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வார் அவர் தொழிலாளர்கள் கொண்டுவந்த மெமோ அடிப்படையில் அரசு அல்லது தனியார் நிர்வாகத்திற்கு அல்லது நீதிமன்றத்திற்கு மெமோ வின் அடிப்படையில் பதில் மனு தயாரிப்பார். தோழர் மன்னார்சாமி அருகில் தட்டச்சு இயந்திரத்துடன் நான் அமர்ந்து இருப்பேன்.அவர் சொல்லச் சொல்ல நான் அவர் கூறும் வார்த்தைகளை தட்டச்சு செய்ய வேண்டும். எழுதிக்கொடுத்த பேப்பரில் உள்ள விஷயங்களை தட்டச்சு செய்து பழகிய எனக்கு ஒருவர் வாய்மூலம் சொல்லச் சொல்ல தட்டச்சு செய்வது சவாலாக அமைந்தது.

சில நாட்கள் சிரமமாக இருந்தாலும் அடுத்தடுத்து அவர் சொல்லுக்கு ஈடுகொடுத்து வேகமாக தட்டச்சு செய்து பழகிக்கொண்டேன்.இதுவே எனது வாழ்க்கை பாதை திருப்புமுனையாக அமைந்தது.இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மோட்டார் யூனியனில் அலுவலக செயலாளராக இருந்து தொழிலாளர்களுக்கு உதவும் பணி செய்து கொண்டிருந்தேன் இந்த நிலையில் நீதிமன்றம் சென்று லேபர் கோர்ட் சென்று தொழிற்சங்க பிரச்சினைகளுக்கு அணுகும் பணியும் செய்தேன்.மோட்டார் யூனியனில் பணி செய்தபோது தொழிற்சங்க பணிகளுக்காக வரும் தோழர்கள் ( டிரைவர் கண்டக்டர்) என்னுடன் நன்கு பழக ஆரம்பித்தார்கள் எனது வேகமான தட்டச்சு செய்யும் பணியினை பிரமிப்போடு ரசிப்பார்கள்
இங்கு ஒரு சுவராசியமான நிகழ்வும் நடந்தது.

அன்று அரசியல் கட்சி தலைவர்களுக்கு மாவட்டங்களுக்கு கிராமங்களுக்கு அரசியல் பணிகள் செய்ய செல்வதற்கு பிரதானமான போக்குவரத்து ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து தான். அன்று திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் மூலம் நீண்ட தூர பயணத்திற்கு உகந்ததாக இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் அவசரமாக பயணிக்க வேண்டி வந்தால் மோட்டார் யூனியனில் உள்ள தலைவர்களை அணுகுவார்கள். திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர் இருக்கைக்கு பின்புறம் இருக்கும் இரண்டு இருக்கையும் யாருக்கும் ஒதுக்கப் படாமல் இருக்கும். இந்த இருக்கை அரசு அல்லது அரசு சார்பான பணிகளுக்குச் செல்லும் அதிகாரிகள் அல்லது சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்பதிவு செய்யாமல் நேரடியாக பேருந்தில் செல்வதற்காக இந்த வசதி செய்யப்பட்டிருந்தது.

ALSO READ  சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி – 8 (இலக்கிய ஆளுமை)

தலைவர்கள் வரும்போது அவர்களை அருகிலுள்ள விரைவு போக்குவரத்து கழக பேருந்து நிலையம் சென்று ஏதாவது ஒரு பேருந்தில் அவர்களை ஏற்றி அனுப்புவதும் என்னுடைய பணியாக இருந்தது. பேருந்தில் அவசரமாக பயணம் மேற்கொள்ள வரும் தலைவர்கள் நேரடியாக மோட்டார் யூனியன் அலுவலகத்திற்கு வந்து விடுவார்கள். நான் தட்டச்சு செய்து கொண்டிருப்பேன் .

அவர்கள் வந்தவுடன் அவர்களை வரவேற்று விட்டு சற்று அமருங்கள் இந்தப் பணியை முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறி தட்டச்சு பணியை முடிப்பேன். எனது வேகமான தட்டச்சுப் பணியை வரும் தலைவர்கள் மிகவும் ஆச்சரியத்தோடு பார்ப்பார்கள். எனது தட்டச்சு பணியை மிகவும் ரசித்து பார்த்தவர்கள் தோழர் வி பி சிந்தன், தோழர் அப்துல் வகாப் ,தோழர் பி இராமமூர்த்தி இன்னும் நிறைய தலைவர்கள்.

தோழர் பி.ராமமூர்த்தி, தோழர் எஸ்.ஏ. பெருமாள்

இரண்டு ஆண்டுகள் கழித்து தோழர் எஸ். ஏ. பெருமாள் தீக்கதிர் பத்திரிகையில் தோழர் இராமமூர்த்தி உனக்காக காத்துக்கொண்டிருக்கிறார் சென்று பார்த்துவிட்டு வா என்று என்னை பணித்தார்.

தோழர் எஸ். ஏ. பெருமாள்

தீக்கதிர் பத்திரிகை அலுவலகம் சென்ற என்னை தோழர்கள் இராமமூர்த்தி எம் ஆர் வெங்கட்ராமன் அப்துல் வாஹாப் சேஷகிரி ஆகியோர் என் பணிகள் குறித்து விசாரித்தனர் கல்வித்தகுதி மற்றும் எனது குடும்ப பின்னணி அனைத்தையும் அறிந்திருந்தார்கள். தீக்கதிர் அலுவலகத்தில் உங்களுக்கான பணி காத்திருக்கிறது விரைவில் வாருங்கள் என்று தெரிவித்தார்கள்.

இரண்டு நாள் கழித்து தோழர் அப்துல் வஹாப் மோட்டார் யூனியன் அலுவலகம் வந்தார் அனேகமாக அந்த மாதம் பதினெட்டாம் தேதியாக இருக்கும் எனக் கருதுகிறேன். தோழர் பிரபாகர் நீங்கள் எப்போது தீக்கதிர் பணி ஏற்க போகிறீர்கள் என்று கேட்டார். நான் ஒன்றாம் தேதி முதல் வருவதாக தெரிவித்தேன் அது என்ன ஒன்றாம் தேதி நாளையே வந்துவிடுங்கள் என்று என்னிடமும் தோழர் மன்னார்சாமி இடமும் தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார். அடுத்த நாள் முதல் தீக்கதிர் பத்திரிகை அலுவலகம் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த திருப்பு முனைக்கு காரணம் எனது பாசமலர் வசந்தா தான்.

– தொடரும்

சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி – 1


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து

naveen santhakumar

உங்க ஃபோன்ல நெட் ஸ்லோவா??????வேகத்த அதிகரிக்க இதை டிரை பண்ணுங்க…..

naveen santhakumar

டோல்கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க?

Admin