சாதனையாளர்கள் லைஃப் ஸ்டைல்

சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி – 8 (இலக்கிய ஆளுமை)

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தான் பார்த்த, பழகிய,நேசித்த, கற்றுக் கொண்ட, கொண்டாடிய மனிதர்களை அவர்களுடனான தன் நினைவுகளை மூத்த பத்திரிக்கையாளர் எம்.ஜெ. பிரபாகர் பகிர்ந்து கொள்ளும் தொடர் இது.

இன்றைய பகுதியில் நான் எழுத போவது தீக்கதிர் நாளிதழ் மற்றும் செம்மலர் மாத இதழில் ஆசிரியர் தோழர் கே முத்தையா குறித்து தான்.தீக்கதிர் முதலில் மாலை நாளிதழாக இருந்து பின்னர் காலை நாளிதழாக மாறியது.மாலை நாளிதழாக இருக்கும்போது காலை ஆறு முப்பது மணிக்கு ஆசிரியர் குழு கூட்டம் நடைபெறும். இதில் இன்றைய செய்திகள் தலையங்கம் இது போன்ற விஷயங்களை சுமார் ஒரு மணி நேரம் விவாதித்து வழிகாட்டுவார் தோழர் கே முத்தையா.அன்றைக்கு தீக்கதிர் பத்திரிகை அச்சிடும் மிஷின் மிகவும் பழமை  வாய்ந்தது.ஜெர்மன் நாட்டிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலத்தின் பத்திரிக்கையான தேசாபிமானி நாளிதழ் அச்சிடுவதற்கு வாங்கப்பட்ட மிஷின் ஆகும்.

தேசாபிமானி தனது அச்சிடும் பணியினை மாநிலத்தின் பல மையங்களுக்கு விரிவுபடுத்தியது. அப்போது பழைய மிஷினை விற்பனை செய்துவிட முடிவு எடுக்கப்பட்டது .இந்த தகவலை தோழர் பி. ராமமூர்த்தி கேள்விப்பட்டு கேரள மாநில கட்சியுடன் தொடர்பு கொண்டு அந்த மிஷினை தீக்கதிர் நாளிதழுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அணுகினார். தமிழக கட்சி தலைமையில் முடிவு எடுக்கப்பட்டு அதன் பின் அந்த ஜெர்மன் மிஷின்  மதுரைக்கு வந்து சேர்ந்தது. இது மிகவும் பழைய மிஷின் .

ALSO READ  சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி – 4 (வளர்த்த தந்தை)

இன்றைக்கு உள்ளது போல் கம்ப்யூட்டர் போன்ற நவீன விஷயங்கள் அன்றைக்கு இல்லை. ஏராளமான தோழர்கள் ஒவ்வொரு எழுத்தாக அச்சுக் கோர்த்து ஒவ்வொரு பக்கமாக தயார் செய்வார்கள்.ஒவ்வொரு பக்கமும் தயாரானவுடன் மாடியிலுள்ள ஆசிரியர் முத்தையா எழுத்துப்பிழைகள் இருக்கிறதா என்பதை சரிபார்த்து திருத்தங்கள் போட்டு அனுப்பி வைப்பார். இவரோடு சேர்ந்து ஆசிரியர் குழு தோழர்களும் எழுத்துப்பிழைகளை கண்டறிந்து உரிய உதவிகளை செய்வார்கள் .நான்கு பக்கமுள்ள பத்திரிக்கையாக வந்தது தீக்கதிர். பிற்பகல்ஒரு மணிக்குள் அச்சுக்கு தயாராக வேண்டும். மிஷின் ஓட ஆரம்பிக்கும்.

மாடியிலிருந்து தோழர் கே முத்தையா எட்டிப்பார்த்து மெஷினை நிறுத்துங்கள் இன்று என பலமாக கத்தி சொல்லுவார். பழமையான மிஷின் என்பதால் சத்தம் அதிகமாக இருக்கும். அந்த சத்தத்தை மீறி அவரது குரல் ஒலிக்கும்.ஒரு எழுத்துப் பிழை இருந்தால் கூட அவர் கண்ணில் பட்டால் அதை திருத்திய பின்பே அச்சிட கூறுவார். அந்த அளவுக்கு பத்திரிக்கையின் மேல் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டவர். அவருக்கான உணவை அவரே தயார் செய்து கொள்வார் .யாராவது ஒரு தோழர் அன்றைக்கு உணவு எடுத்து வரவில்லை என்றால் உடனடியாக அவரை அழைத்துவந்து அவரோடு சேர்ந்து சாப்பிட பணிப்பார்.
இலக்கியத்தில் மிகப்பெரிய ஆளுமை கொண்டவர். ராமாயணம் உண்மையும் புரட்டும் சிலப்பதிகாரம் உண்மையும் புரட்டும் போன்ற  பல நூல்களை எழுதியுள்ளார். ராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் காணப்படும் பொய்மையை வெளிக்கொண்டு வந்தது ,இவரது இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தியது.

ALSO READ  சென்னை தினத்தை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு!
தோழர் முத்தையா

வாக்கியங்களை அமைப்பது, ஒற்றுப் பிழைகள், எழுத்துப்பிழைகள் எப்படி கண்டறிவது திருத்தங்கள் செய்வது என்பதை கே முத்தையா மூலம் என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.நிர்வாகப் பணியில் இருந்த எனக்கு எழுத்துப் பணியை செய்வதற்கு வித்திட்டவர் ஆசிரியர் கே. எம் என்று அனைவராலும் அழைக்கப்படும் தோழர் கே. முத்தையா ஆவார். 

-தொடரும்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாம்பழம் சாப்பிட்ட பிறகு இதையெல்லாம் மறந்தும்கூட சாப்பிட்ராதீங்க…..

Shobika

உலகின் இளம் பெண் பிரதமர் சன்னா மரின் …

Admin

உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் “வாழைப்பழ தோல்”

Admin