சாதனையாளர்கள் லைஃப் ஸ்டைல்

சில மனிதர்கள்… சில நினைவுகள் (கண் ஒளி வழங்கியவர்)…பகுதி – 13

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தென்மாவட்டங்களின் பிரதானமான கண் மருத்துவமனை என்றால் அரவிந்த் கண் மருத்துவமனை தான்.இதில் பணியாற்றி பின்பு தனியாக கண் மருத்துவமனை ஆரம்பித்து மதுரை மக்களுக்கு மிக சிறப்பானதொரு சேவையாற்றி வரும் கண் மருத்துவர் சீனிவாசன்.நகைச்சுவையோடும், மிகுந்த அக்கறையோடும் நோயாளிகளை அணுகி நோய் தீர்ப்பதில் வல்லமை மிகுந்தவர் மருத்துவர் சீனிவாசன்.

மதுரை குட்செட் தெருவில் ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் கிளையாக சோமசுந்தரம் காலனியில் ஒரு சிறிய அறையில் மருத்துவ சிகிச்சை வழங்கி வந்தார் மருத்துவர் சீனிவாசன். அங்குதான் மருத்துவர் சீனிவாசனுடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது.

எனது தாத்தா பி.வி.துரைராஜ் அரவிந்த் கண் மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 75 இருக்கும்.

அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு பார்வை தெளிவின்றி இருப்பதாக கூறினார். மீண்டும் அரவிந்த் கண் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்தோம். மருத்துவர்கள் மிக சிறப்பாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனவே தெளிவாகத்தான் உள்ளது. உங்களது மனநிலை தான் அப்படி உள்ளது என்றும் சில மாதங்களில் சரியாகி விடும் என்று தெரிவித்து விட்டார்கள்.அறுவை சிகிச்சை செய்தும் மிகத்தெளிவாக பார்வை இல்லை என்ற கவலை அவரிடம் இருந்தது. அப்போது சோமசுந்தரம் காலனி இருந்த மருத்துவ சீனிவாசனை நான் அணுகினேன், தாத்தாவை அழைத்து வாருங்கள் பார்த்துவிட்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று திட்டமிடலாம் என்று கூறினார்.தாத்தாவை அழைத்துக்கொண்டு அவருடைய மருத்துவமனைக்கு சென்றேன்.  தாத்தாவை பரிசோதித்துவிட்டு அறுவைசிகிச்சை நன்றாகவே செய்துள்ளார்கள். ஆனால், அதில் பொருத்தப்பட்டுள்ள லென்ஸ் மேலிருக்கும் லேசான திரை போன்ற ஒரு பகுதி அறுவை சிகிச்சைக்குப் பின்பும் கரைந்துவிடும். உங்களுக்கு அந்த திரை போன்ற பகுதி கரையாமல் அப்படியே உள்ளது. எனவே நீங்கள்  மீண்டும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சென்று நான் கூறியதை கூறுங்கள். லேசர் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்து விடுவார்கள் என்று கூறினார்

லேசர் அறுவை சிகிச்சை அப்போது தான் புதிதாக வந்துள்ள காலம்.மீண்டும் தாத்தா துரைராஜ் உடன் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சென்றேன். மருத்துவர்கள் பரிசோதித்து ஏற்கனவே கூறியது இவ்வளவுதான் பார்வை வரும். உங்கள் வயதுக்கு இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. லேசர் மருத்துவம் செய்ய இயலாது என்று திடமாக தெரிவித்து விட்டார்கள்.
மீண்டும் மருத்துவர் சீனிவாசனை அணுகினோம் மிகவும் தெளிவாக மீண்டும் குறிப்பிட்டார். உங்களுக்கு அந்த திரை கரையவில்லை அதை கரைத்தால் சரியாகிவிடும். மிகத் தெளிவான பார்வை கிடைக்கும் என்று கூறினார் .அரவிந்த் மருத்துவமனைக்கு சென்று வந்த கதையை தெரிவித்தோம். அவரே நேரடியாக அரவிந்த் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு மீண்டும் அப்பாயின்மென்ட் வாங்கி கொடுத்தார். நானும் உடன் வருகிறேன் என்று தெரிவித்தார்.அத்தோடு என் மீது நம்பிக்கை இல்லை என்றால் ஒரு கோடி ரூபாய் இன்சூரன்ஸ் செய்யுங்கள் என்று நம்பிக்கையூட்டினார். அதன்பின்பே, தாத்தா மருத்துவமனைக்கு சென்று லேசர் சிகிச்சை செய்து அவரது பார்வையை சரி செய்ய முடிந்தது .

ALSO READ  மறந்தும் கூட இதெல்லாம் தயிருடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்….!!!!

அரவிந்த் மருத்துவமனை இரண்டாவதாக செய்த லேசர் அறுவை சிகிச்சைக்கு பணம் கூட பெற்றுக்கொள்ளவில்லை. இலவசமாகவே செய்து கொடுத்தது. அந்த அளவிற்கு நோயாளிகள் மீது மிகுந்த அக்கறையோடும், பாசத்தோடும் சிகிச்சை மேற்கொள்பவர் தான் மருத்துவர் சீனிவாசன்.இந்த சம்பவம் நடந்தது 1997ம் ஆண்டு. இதற்கு பின்பு மருத்துவரோடு இருக்கக்கூடிய நெருக்கம் அதிகமானது. எளிய முறையில் அணுக கூடியவர் மருத்துவர் சீனிவாசன். கிட்டத்தட்ட 400 பேர்களுக்கு மேல் மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ளுங்கள் என்று பரிந்துரை செய்துள்ளேன். சென்னையிலிருந்து கூட எனது உறவினர்கள், தோழர்கள் கூட மதுரை சென்று கண் மருத்துவர் சீனிவாசனிடம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்கள்.

ALSO READ  சிறுத்தைக்குட்டிகள் கூட வாடகைத்தாய் மூலம் பிறக்குமா?

-தொடரும்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெண்களே !! தினமும் இந்த 5 ஊட்டச்சத்துக்களை அவசியம் எடுத்துக்கோங்க..

naveen santhakumar

இனிமே பவுண்டேஷன் கிரீம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க சும்மா ஜொலிப்பீங்க ……..

naveen santhakumar

அர்ஜுனா விருது பாஸ்கரனுக்கு ஊக்கத்தொகை: தமிழக அரசு அரசாணை வெளியிட்டு…

Admin