சாதனையாளர்கள் லைஃப் ஸ்டைல்

சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி – 3 (நவரத்தினங்களுள் ஒன்று )

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தான் பார்த்த, பழகிய,நேசித்த, கற்றுக் கொண்ட, கொண்டாடிய மனிதர்களை அவர்களுடனான தன் நினைவுகளை மூத்த பத்திரிக்கையாளர் எம்.ஜெ. பிரபாகர் பகிர்ந்து கொள்ளும் தொடர் இது.

தோழர் எம்.ஜெ.பிரபாகர்

தீக்கதிர் நாளிதழில் எனது பணி தொடர்ந்தது.சில மாதங்கள் கழித்து தோழர் அப்துல் வகாப் நீங்கள் பெங்களூர் செல்ல வேண்டும் மூன்று மாதங்கள் அங்கேயே இருக்க வேண்டும் என்ற தகவலை தெரிவித்தார்.எனது தட்டச்சு பணியின் அவசியம் என்ன என்பது அப்போது தெளிவானது. நான் எதிர்பாராத வகையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரான பி. ராமமூர்த்தியின் திராவிட இயக்க வரலாற்று நூலை உருவாக்குவதற்கான வாய்ப்பு தான் அது.

தோழர். பி. ராமமூர்த்தி

தோழர் பி. ராமமூர்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் . மதுரை சிறைச்சாலையில் இருந்தபடியே மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டவர்.

தோழர் பி. ராமமூர்த்தி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து 1964 பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. கட்சியின் முதல் அரசியல் தலைமைக்குழு அப்போது உருவாக்கப்பட்டது. இக்குழுவில் நவரத்தினங்கள் தோழர்கள் இ .எம். எஸ் நம்பூதிரிபாட், ஜோதிபாசு, பசவ பொன்னையா, நிருபன் சக்கரவர்த்தி சுந்தரையா, ஹரி கிஷன் சிங் சுர்ஜித், பி. ராமமூர்த்தி, பி. டி ரணதிவே, ப்ரோமோத் தாஸ் குப்தா மற்றும் ஏ .கே கோபாலன் ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள்.9 தோழர்கள் இடம் பெற்றதால் நவரத்தினங்கள் என்று குறிப்பிடுவது உண்டு.இந்த நவரத்தினங்களில் ஒன்றான தோழர் பி ராமமூர்த்தி உடன் மூன்று மாத காலம் இருந்து தமிழக வரலாற்றை எழுத கட்சி பணித்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள்

பெங்களூரில் உள்ள ஹிந்து பத்திரிகையின் விருந்தினர் இல்லத்தில் இந்தப் பணி தொடங்கியது. தோழர் பி. ஆர் தன்னுடைய நினைவிலிருந்து வரும் வரலாற்றை எழுத்து வடிவமாக பதிவு செய்வதே எனது பணி. அப்போது எனக்கு வயது 21 மட்டுமே. அவ்வளவு பெரிய மார்க்சிய ஆளுமையோடு மூன்று மாத காலம் இருந்தோமே என்ற நினைப்பு இப்போதும் ஒரு வித சிலிர்ப்பை தரும்.

ALSO READ  சில மனிதர்கள் - சில நினைவுகள் பகுதி -10 (வரலாறு)
தோழர் பி.ராமமூர்த்தி முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியுடன்

ஆரிய மாயையா திராவிட மாயையா விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் என்ற நூல் கொஞ்சம் கொஞ்சமாக உருவானது. தினமும் தோழர் பி ஆர் சொல்லச் சொல்ல இந்த வரலாற்றை நான் பதிவு செய்தேன். இடையிடையே எனக்குத் தெரியாத பல விஷயங்களை கேட்டால் மிகவும் சந்தோசமாக குறைந்தது அரை மணி நேரமாவது எனக்கு விளக்கம் அளிப்பார். பெங்களூருவில் யாருடனும் தொடர்பு கொள்ளாது இந்தப் பணியை முடித்திட வேண்டும் என கட்சி பணித்தது. இந்த சூழலில்தான் தான் வரலாற்று நூலினை தோழர் பி ஆர் பதிவு செய்ய முடிந்தது. ஆனால் இடையிடையே நிறைய இடர்பாடுகளும் ஏற்படும். இந்த இடர்பாடுகள் அவரது சொந்த குறுக்கீடுகள் அல்ல. அரசியல் ரீதியான இடர்பாடுகள் தான்.

தோழர்.பி.ராமமூர்த்தியின் குடும்பம்

குறிப்பாக தோழர் பி ஆர் இந்த வரலாற்று நூலினை பதிவு செய்யும் காலத்தில்தான் இந்திய நாட்டின் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஜெயில்சிங் போட்டியிட்டார். இடதுசாரி கட்சிகளின் சார்பாக நீதிபதி கண்ணா போட்டியிட்டார்.இத் தேர்தலில் தோழர் பி. ராமமூர்த்தியின் பங்கு மிக அளப்பரியது.

நீதிபதி ஹன்ஸ் ராஜ் கண்ணா

அப்போது இந்திய நாட்டின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையார் உள்ளிட்ட பல அகில இந்திய தலைவர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்த முக்கிய தலைவர்கள் மு. கருணாநிதி மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகியோர் ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக தோழர் பி. ஆருடன் தொலைபேசி வாயிலாக பேசினார்கள். தோழர் பி ஆர் அவர்களது பணி எவ்வளவு மகத்தானது என்பதை அப்போது நான் புரிந்து கொண்டேன். இதுபோன்று பல அரசியல் விஷயங்களில் அவர் தலையிட்டு சரியான வழிகாட்டுதலை வழங்கிய போது அவரது ஆளுமையை நான் புரிந்து கொண்டேன்.

ALSO READ  சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி - 1
தோழர பி. ராமமூர்த்தி

இந்த வரலாற்று நூலினை குறைந்தது 6000 பக்கங்களாவது பி.ஆர். சொல்லச் சொல்ல நான் எழுதியிருப்பேன்.பணி முடிந்து மதுரை தீக்கதிர் நாளிதழ் அலுவலகம் வந்து நான் பதிவு செய்த பக்கங்களை ஒரு மாதத்திற்கு மேலாக தட்டச்சு செய்தேன். நான் தட்டச்சு செய்ததை தோழர் என் ராமகிருஷ்ணன் சரி பார்த்தார்.சென்னையில், ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் என்ற வரலாற்று நூல் பழனியப்பா பிரதர்ஸ் என்ற பதிப்பகம் 468 பக்கங்கள் கொண்ட நூலாக 1983 இல் வெளிக்கொண்டு வந்தது.

ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் நூல்

இந்த வரலாற்று நூல் எனக்கு இந்திய அரசியலையும் தமிழக வரலாற்றையும் முழுமையாக அறிந்துகொள்ள பேருதவியாக இருந்தது என்பதே உண்மை.கம்யூனிஸ்ட் கட்சியின் பெரிய ஆளுமை மிகவும் எளிமையாக, ஒரு மாபெரும் தலைவர் என்ற சிறு அடையாளம் கூட இன்றி இந்த வரலாற்று நூலை தோழர் பி. ஆர் பதிவு செய்தார்.


இந்த வரலாற்று நூல் வெளிவந்த பின்பு எனது பணிகள் மேலும் மார்க்சிய இயக்கத்தில் விரிவடைந்தது.

-தொடரும்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தூக்கமின்மை பிரச்சனையா?, கொஞ்சம் சீஸ் நல்ல தூக்கம்…

Admin

சின்ன சின்ன சமையல் டிப்ஸ் !

Admin

சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி 5 – (ஆசான்)

News Editor