சாதனையாளர்கள்

தென்னாப்பிரிக்க அணி வீரர் அல்பி மோர்க்கல் பற்றிய ஒரு பார்வை….!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜோனஸ் ஆல்பர்டஸ் அல்பி மோர்க்கல் (ஜூன்-10,1981) தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். சகலத்துறையரான இவர் இடதுகை மட்டையாளர்.இவர் வலது கை மித விரைவு வீச்சாளர் ஆவார்.மேலும் இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு 20-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் ஆறு ஓட்டங்களை அடிக்கும் திறனால் லான்ஸ் க்லூஸ்னருடன் ஒப்பிடப்படுகிறார்.

இவருக்கு மோர்னி மோர்க்கல் எனும் சகோதரர் உள்ளார்.அவரும் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் இவர்களின் தந்தையும் தென்னாப்பிரிக்க மாநில துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் சிறப்பாக விளையாடினார். இவரின் மட்டையாளர் சராசரி 44.0 ஆகவும் பந்துவீச்சு சராசரி 29.0 ஆகவும் உள்ளது.

அதனைத்தொடர்ந்து,இவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். இவரின் முதல் போட்டியில் 48 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 5 இலக்குகளைக் கைப்பற்றினார். 2007-ம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவரின் சகோதரரான மோர்னி மோர்க்கலுடன் இணைந்து துவக்க ஓவர்களை வீசினர். இதன்மூலம் துவக்க ஓவர்களை வீசிய ‘முதல் சகோதரர்கள்’ எனும் சாதனையைப் படைத்தனர்.


Share
ALSO READ  உணவுக்காக மூன்று கிலோமீட்டர் தூரம் வரிசையில் நின்ற மக்கள்....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2019 உலக அழகியாக ஜமைக்காவின் டோனி ஆன் சிங் தேர்வு

Admin

ஆதரவற்ற குழந்தைகளின் படிப்புக்காக கழிவறையை சுத்தம் செய்யும் மனிதர்….

naveen santhakumar

55 நாட்களில் 6000 கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்ட இளைஞர்

Admin