சாதனையாளர்கள்

92 மணி நேரம்….12000 முறை வானிலிருந்து குதித்து சாதனை….தமிழரின் போற்றதக்க சாதனை..

தேனி :

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(44). இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றிய போது வான்வெளி சாகசத்துக்காக தேர்வான 5 வீரர்களில் இவரும் ஒருவர்.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2010 வரை அமெரிக்கா, ரஷ்யா, கனடா, நியூசிலாந்து உள்பட பல நாடுகளில் நடந்த வான்வெளி சாகச போட்டிகளில் ராஜ்குமார் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.விமானம், ஹெலிகாப்டர் மூலம் 13 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து அங்கிருந்து கீழே குதித்து ஒரு சில வினாடிகளில் குழுவினருடன் இணைந்து டைமண்ட், சர்க்கிள் வடிவில் சாகசங்களை நிகழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

72 மணி நேரத்தில் 8 ஆயிரம் முறை வானில் இருந்து குதித்து சாகசம் செய்ததை பாராட்டி கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசின் ‘டென்சிங் நார்கே’ என்னும் உயரிய விருதை பெற்றுள்ளார். இந்த விருது அர்ஜூனா விருதுக்கு சமமானது.

இதுகுறித்து ராஜ்குமார் தெரிவிக்கையில்,”2006-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 92 மணி நேரத்தில் 12 ஆயிரம் முறை வானில் இருந்து குதித்து சாகசத்தை செய்துள்ளேன். எனது இந்த சாதனையை பாராட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசு பத்மஸ்ரீ விருதுக்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இது எனக்கு பெருமையாக உள்ளது” என கூறினார்.

Related posts

ஜெயலலிதா பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது- எதற்கு தெரியுமா?

naveen santhakumar

ஜெயலலிதா தன்னுடைய முதல் திரைப்படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

naveen santhakumar

லீவ் எடுக்காத மாணவ மாணவிகளை விமானத்தில் அழைத்து சென்ற அரசு பள்ளி ஆசிரியர்

News Editor