சாதனையாளர்கள்

ஜூன்-10..தமிழக நூலகத் தந்தை தில்லைநாயகம் பிறந்த தினம்…இன்று…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தேனி மாவட்டம் சின்னமனூரில் (1925) பிறந்தவர். தந்தை ஆசிரியர்.சென்னை பல்கலையில் நூலக அறிவியல், நாக்பூர் பல்கலையில் பொருளியல் முதுகலை, மதுரை தியாகராசர் கல்லூரியில் கல்வி இளங்கலை, டெல்லி பல்கலையில் நூலகவியல் முதுகலை முடித்தார்.அண்ணாமலைப் பல்கலையில் பிரான்ஸ், ஜெர்மனி மொழிகளையும், மதுரை காமராசர் பல்கலையில் ஜோதிடமும் பயின்றார்.மாணவப் பருவத்திலேயே நூலகத் துறை மீது அதிக நாட்டம் கொண்டவர். 

1949-ல் அரசு உதவியுடன் நூலகப் பயிற்சி பெற்ற இவர், பொதுக் கல்வித் துறை இயக்க முதல் நூலகராக நியமிக்கப்பட்டார். 1962-ல் கன்னிமாரா பொது நூலகத்தின் நூலகரானார். 1972-ல் தமிழக அரசு பொது நூலகத்துறையின் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.நூலகத் துறை இவரது தலைமையில் மிகச்சிறப்பாக இயங்கியது.மாபெரும் வளர்ச்சி கண்டது.நூற்றொகைகள்,குழந்தை நூற்றொகைகள், நூல்கள், அறிமுகவிழா மலர்களைப் பதிப்பித்தார்.எழுதுவதிலும் அதிக ஆர்வம்கொண்டிருந்தார்.

‘இந்திய நூலக இயக்கம்’ என்னும் இவரது நூல், 40ஆண்டுகளாக இவர் ஆராய்ந்து சேகரித்த தகவல்களுடன் 400 பக்கங்கள் கொண்டது. 4 ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை உள்ளடக்கியது. இவர் வெளியிட்ட ஆய்வறிக்கைகள் நூலக வளர்ச்சித் திட்ட ஆய்வேடுகளாகும்.
நூலகத் துறை இயக்குநர் பதவியை தொடர்ந்து 10 ஆண்டுகள் வகித்தார். அந்த 10 ஆண்டு காலமும் தமிழக நூலக இயக்கத்தின் பொற்காலம் என்கின்றனர் வல்லுநர்கள். 1982-ல் ஓய்வு பெற்றார்.

ALSO READ  உலக செவிலியர் தினம்: பின்னணி மற்றும் வரலாறு...

தமிழில் ‘வேதியம் 1008’ உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்.விரிவாகஆராய்ந்தறிந்து எழுதக்கூடியவர்.இந்திய நூலகத் துறை முன்னோடியான இரா.அரங்கநாதனின்எழுத்துகளால் கவரப்பட்டவர் என்பதால், இவரது எழுத்துகளில்அவரது தாக்கம் தென்படும்.ஆங்கிலத்திலும் பல நூல்கள்எழுதியுள்ளார். ‘நூலக உணர்வு’, ‘வள்ளல்கள்வரலாறு’, ‘இந்திய நூலக இயக்கம்’ஆகிய இவரது நூல்கள் தமிழக அரசின்முதல் பரிசு பெற்றவை. 

இவரது ‘இந்திய நூலக இயக்கம்’ நூலைப் பாராட்டி உலகப் பல்கலைக்கழகம் 1982-ல் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.‘இந்திய அரசமைப்பு’ நூல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பரிசைப் பெற்றது. இவரது ‘குறிப்பேடு’ என்ற நூல்தான் தமிழில் முதன்முதலாக வெளிவந்த ‘ஆண்டு நூல்’ (இயர் புக்). வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, நூலகத்தின் பெருமையை எடுத்துக்கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சில மனிதர்கள்… சில நினைவுகள்(நூலக தாத்தா)பகுதி – 12

naveen santhakumar

அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச் சாதனை

Admin

சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி – 9 (ஆசிரியர்)

News Editor