சாதனையாளர்கள் தமிழகம்

30 ஆண்டுகளாக மலை கிராமங்களில் நடந்தே சென்று பணியாற்றிய தபால்காரர்- பெருமை சேர்த்த IAS அதிகாரி… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நீலகிரி:-

தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளாக தினமும் நடந்தே சென்று பணியாற்றி தபால்காரர் டி.சிவன் (D.Sivan) தற்போது ஓய்வு பெற்றுள்ளார். 

ஓய்வு பெற்ற தபால்காரர் சிவன் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூ தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.

இதில் கடந்த 30 ஆண்டுகளாக தினமும் 15 கிலோமீட்டர் தூரம் கடினமான காட்டுப்பகுதிகளில் சென்று தபால்களை உரியவர்களிடம் சேர்த்துள்ளார். இவரது பயணத்தில் யானைகள், கரடிகள், காட்டெருமைகளால் துரத்தப்பட்டுள்ளார். மேலும் இவரது பயணத்தில் பல நீரோடைகள், அருவிகள் குறுக்கிட்டுள்ளது. ஆனாலும் இத்தனை ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி உள்ளார் என்று பாராட்டியுள்ளார்.

குன்னூரில் இருந்து நாள்தோறும் 15 கி.மீ. துாரம் நடந்தே சென்று, ஏழை மக்களின் தபால்களை பட்டுவாடா செய்த ஊழியர் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 

ALSO READ  சென்னை அண்ணா சாலையில் உள்ள கட்டடத்தில் தீ விபத்து!

நீலகிரி மாவட்டம், குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவன் (62). தற்பொழுது இவரை இணையவாசிகள் கொண்டாடி வருகிறார்கள்.

கடந்த 30 ஆண்டுகளாக தபால் துறையில் பணியாற்றிய இவர், ஹில்குரோவ் தபால் நிலையத்தில், ஆறு ஆண்டுகளாக கிராம தபால்காரராக பணியாற்றியுள்ளார். நாள்தோறும் காலை குன்னூர் தபால் நிலையத்துக்கு வந்து தபால்களை பெற்று சிங்காரா வரை பேருந்தில் செல்கிறார்.

ALSO READ  தனது நற்செயலால் மக்களின் கவனத்தை ஈர்த்த பிச்சைக்காரர்:

பின்னர், அங்கிருந்து வனப்பகுதி வழியாக ஹில்குரோவ் தபால் நிலையத்துக்கு நடந்தே  சென்று தபால்களை ஒப்படைக்கிறார். பிறகு அங்கிருந்து தபால்களை பெற்று ஹில்குரோவ் ரயில் நிலையம், வடுகதோட்டம், மரப்பாலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பழங்குடியின மற்றும் ஏழை மக்களிடம் தபால் கடிதங்களை அளிக்கிறார். 

இந்த கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்கள், ஏழை மக்கள், படிப்பறிவு குறைந்த மக்களின், தபால் துறையில் சேமிப்பு, சிறு சேமிப்பு திட்டம், முதியோர் உதவித்தொகை, மணி ஆர்டர், பதிவு தபால் ஆகியவற்றை குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேர்த்து வருகிறார். 

அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

“வனப்பகுதிகள் வழியாகவும், மலை ரயில் பாதை, பாலங்கள், குகைகள் வழியாகவும், நாள்தோறும் வேக வேகமாக நடந்து வரும் இவரின் வேகத்துக்கு யாரும் ஈடுகொடுக்க முடியாது. இந்த 62 வயது இளைஞரின் அர்ப்பணிப்பான பணி, தபால் துறைக்கே மணிமகுடமாக விளங்குகிறது. சில நேரங்களில், எங்களுக்கு தபால் கொடுக்க வரும் போது, யானை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் இவரை விரட்டியுள்ளது, தனது உயிரை கையில் பிடித்து ஓடி தப்பித்துள்ளார்” என்றனர். 

சிவன் தபால்காரர் அல்ல சிறந்த மனிதநேயர் என்று சிலாகிக்கிறார்கள் மலைவாழ் மக்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீனை உயிருடன் விழுங்கிய இளைஞர் பரிதாப பலி- டிக்-டாக்கால் விபரீதம்..?

naveen santhakumar

சாலைகளை பயன்படுத்துவது பொதுமக்களின் அடிப்படை உரிமை- போட் கிளப் சாலைக்கு தடை விதிக்க மாநகராட்சி மறுப்பு..

naveen santhakumar

கள்ளக்குறிச்சி மரசிற்பத்துக்கு புவிசார் குறியீடு : தமிழக அரசு உத்தரவு

News Editor