சாதனையாளர்கள்

இறுதிச் சுற்றில் நண்பன் உயிரிழப்பு.. மனம் தளராமல் நடனம் ஆடி முதலிடம் பிடித்த இந்தியர்கள்.. அமெரிக்காவே அசந்து போன அதிசயம்..!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவின் ‘America’s Got Talent’ ஷோ உலக புகழ்பெற்றது. சமீபத்தில் நடந்த சீசன் 2-ல் உலகம் முழுவதும் இருந்து 40 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

பல்வேறு சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் இந்தியாவிலிருந்து பங்கேற்றுக்கொண்ட மும்பை அணி வெற்றிவாகை சூடி அசத்தியிருக்கிறது.

மும்பையைச் சேர்ந்த பிரபல டான்ஸ் குழு ‘Unbeatable’. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 29 இளைஞர்கள் கொண்ட இந்தக் குழு கடந்த ஆண்டும் `America’s Got Talent ‘ போட்டியில் கலந்துகொண்டு 4-வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு மீண்டும் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்ற இந்தக் குழு தொடக்கத்தில் இருந்தே ரசிகர்களிடத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

அரை இறுதிச்சுற்றின்போது இக்குழுவில் இருந்த 22 வயது, விகாஸ் விபத்தில் உயிரிழந்தார்.

அவரின் இறப்புக்குப் பின், சற்று பின்தங்கிய நிலையில் இருந்த ‘Unbeatable’ குழுவினர்; தன் நண்பனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘V- Unbeatable’ என்று தன் நண்பனின் முதல் எழுத்தை தன் குழுவின் முதல் எழுத்தாகச் சேர்த்து களம் இறங்கினர்.

ALSO READ  சில மனிதர்கள்... சில நினைவுகள் (கண் ஒளி வழங்கியவர்)...பகுதி - 13

‘America’s Got Talent: The champions season-2’ ன் இறுதிச்சுற்றில் ‘பேட்ட’ படத்தில் வெளியான ‘மரணம் மாஸ் மரணம்’ பாடலுக்கு நடனம் ஆடி எல்லோருடைய கவனத்தையும் வாக்குகளையும் பெற்று முதலிடத்தைத் தட்டிச்சென்றது.

‘V- Unbeatable’ குழுவின் வெற்றிக்கு ரன்வீர் உட்பட பல பாலிவுட் நக்ஷத்திரங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ  மனநலம் குறித்த விழிப்புணர்வுக்காக சர்வதேச கிறிஸ்டல் விருது பெற்றார் : தீபிகா படுகோனே

இது குறித்து கூறிய “V- Unbeatable’ குழுவினர்”:-

எங்கள் குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் பொருளாதார ரீதியாக எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு வருகிறோம்.

நடனம் எங்களுக்கான அடையாளத்தை உருவாக்கப்போவதில்லை என்ற ஏளனங்கள் எங்கள் அன்றாட வாழ்வில் தவிர்க்கவே முடியாத ஒன்றாகவே மாறியிருந்தது. இந்நிலையில் எங்களின் நண்பனின் மரணம் எங்களை உளவியல் ரீதியாகவும் பாதித்தது.

இக்கட்டான இந்த சூழலில் இப்போட்டியை நாங்கள் எங்களை நிரூபிக்க கிடைத்த கடைசி வாய்ப்பாகவே கருதினோம். இரவு பகலாகப் பயிற்சி மேற்கொண்டோம். இந்த வெற்றி கனவுபோல இருக்கிறது. இது வெற்றி மட்டுமல்ல, இது எங்களின் அடையாளம்.

இந்த வெற்றியைக் கொண்டாட எங்களின் நண்பன் இல்லை. அவனுக்கு எங்களின் வெற்றியைச் சமர்ப்பிக்கிறோம் என்று கூறியுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சில மனிதர்கள்… சில நினைவுகள் (கண் ஒளி வழங்கியவர்)…பகுதி – 13

naveen santhakumar

30 ஆண்டுகளாக மலை கிராமங்களில் நடந்தே சென்று பணியாற்றிய தபால்காரர்- பெருமை சேர்த்த IAS அதிகாரி… 

naveen santhakumar

ஆதரவற்ற குழந்தைகளின் படிப்புக்காக கழிவறையை சுத்தம் செய்யும் மனிதர்….

naveen santhakumar