சாதனையாளர்கள்

537.5 கிலோ எடை கொண்ட பளுவை தூக்கி சாதனை செய்த ஒலெக்ஸி :

உக்ரைன்:

உக்ரைனைச் சேர்ந்த ஒலெக்ஸி நோவிகோவ் என்பவர் 537.5 கிலோ எடை கொண்ட பளுவினை தூக்கி, “உலகின் வலிமையான நபர்” என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.

2020ம் ஆண்டுக்கான “உலகின் வலிமையான நபர்” என்ற படத்திற்காக ஏராளமானோர் போட்டியிட்டனர். இதற்காக பல ஆண்டுகளாக பயிற்சி மேற்கொண்டு தங்கள் உடல் எடையையும், வலிமையையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வருகின்றனர். இதன் இறுதி போட்டியில் உக்ரைனை சேர்ந்த ஒலெக்ஸி நோவிகோவ் வெற்றி பெற்று உலக சாதனை படைத்துள்ளார். 

இதில் அவர் 537.5 கிலோ கொண்ட பளுவினை தூக்கி அசத்தியுள்ளார். 18 இன்ச் உயரத்திற்கு இதனை தூக்கி சாதனை படைத்துள்ளார்.இதற்கு முன்னதாக 535 கிலோ பளு தூக்கியதே உலக சாதனையாக பார்க்கப்பட்டது.தற்போது அதனையும் மிஞ்சும் வகையில் ஒலெக்ஸி தற்போது அதிக அளவிலான எடை தூக்கியுள்ளார். 

தனது பயிற்சியின் போது எடுத்த வீடியோக்களையும் சமூக வலைதள பக்கத்தில் பகிர அவை வைரலாகி வருகிறது. அவருக்கு பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா செல்ல நாளை முதல் தடை

Admin

இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் பிறந்த தினம் இன்று

Admin

சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி – 1

News Editor