ஜோதிடம்

மாசி மாத பலன்கள்… சிறப்பான மாதத்தை எதிர்நோக்கும் ரிஷப ராசிக்காரர்களே..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாதத்தின் முற்பகுதியில் உங்களுடைய ராசிநாதனான சுக்கிரன் பதினோராம் இடத்தில் உச்சம் பெற்று இருப்பது மிக சிறப்பான அமைப்பாகும். இவ்வாறு மாதத் தொடக்கம் அமைந்துள்ளதால் இது ஒரு சிறப்பான மாதமாகவே உங்களுக்கு அமையும்.


உங்களுடைய ராசி அதிபதி மட்டுமல்லாமல் உங்களுடைய ஆறாம் இடத்திற்கு அதிபதியான சுக்கிரன் வலுப் பெற்று அமைந்திருப்பது உங்களுடைய கடன் நோய் எதிரிகளிடமிருந்து உங்களை காக்கும். கடன் நோய் எதிரிகளால் கவலைப்பட்டு வந்தவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நிம்மதி பிறக்கும்.


வெகுநாட்களாக இழுத்து வந்த பண விவகாரங்கள் முடிவுக்கு வந்து பண வரவு உண்டாகும். சகோதர உறவு நன்றாக அமையும்.வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இதுநாள் வரை கணவன்-மனைவி இடையே இருந்த பிரச்சினை தீரும்.
எட்டாம் இடத்தில் ஆட்சி நிலையில் அமைந்துள்ள குரு தன்னுடைய ஏழாம் பார்வையால் இரண்டாம் வீட்டைப் பார்ப்பது தனவரவை நிச்சயம் உண்டாக்கும்.உடல் நலம் சீரடையும் உழைப்பு அதிகரிக்கும்.

ALSO READ  இந்தத் திசையில் பீரோவை வைத்தால் கண்டிப்பாக செல்வ வளம் பெருகும்:


குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் படிப்படியாக தீரத் தொடங்கும். தாயார் வழி நன்மைகள் உண்டு.மன நிம்மதி கிட்டும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம்.சிலருக்கு தொழில் விஷயமாக இட மாறுதல்கள் ஏற்படக்கூடும். உங்களுக்கு நடக்கக்கூடிய தசாபுக்திகள் கைகொடுக்கும் என்றால் வெளிநாட்டுப் பயணங்கள் அல்லது வெளிமாநில பயணங்கள் ஏற்படக்கூடும்.சொந்தத் தொழில் மற்றும் வியாபாரம் மந்தமாக தான் செல்லும்.வாழ்க்கைத் துணை, கூட்டுத் தொழிலில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை ஏற்படும்.

நல்ல முன்னேற்றம் உண்டு.வீட்டில் இருக்கும் பெண்கள் அவசரப்பட்டு வார்த்தையை விட வேண்டாம். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பொறுமையாக செயல்படுங்கள்.ஒன்பதாம் இடத்தில் ஆட்சி பெற்றுள்ள சனி தந்தையுடன் சில கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும். தந்தை மகனுக்கான உறவில் கவனம் தேவை.தாய் மாமனுடன் சச்சரவு வேண்டாம்.குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.

ALSO READ  சுத்தியலில் தங்கம் கடத்திய வாலிபர்..!

சந்திராஷ்டம நாட்கள் அன்று விவாதங்களை தவிர்க்க வேண்டும். சந்திராஷ்டம

நாட்கள்: 18-ம் தேதி அதிகாலை 5.00முதல் 20-ம் தேதி மதியம் 2:00

வரைவழிபட வேண்டிய தெய்வம்:லட்சுமி நாராயணன்

இந்த ஜோதிட பலன்களை கணித்தவர் திருமதி. ஜனனி ஸ்ரீதர் (DNA astrologer) . மேலும் சந்தேகங்கள் மற்றும் பலன்களுக்கு astrotamiltalk@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்

மேலும் காணொளியில் காண: https://bit.ly/2OukP6E


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இனி Default App ஆகிறது ஆரோக்கிய சேது App…

naveen santhakumar

இனி ரூ.2000 கிடையாது – ரிசர்வ் வங்கி அடுத்த அதிரடி

Admin

கொரோனா வைரஸ் ஆராய்ச்சிக்கு 3.7 மில்லியன் டாலர் வழங்கிய அமெரிக்கா ….

naveen santhakumar