ஜோதிடம்

2020 ஆம் ஆண்டு தனுசு ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தாலும் அலைச்சல் தூக்கமின்மை சோர்வு போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது .புத்திர வழியில் சுப செலவுகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதால் தேவையற்ற மன உளைச்சலை தவிர்க்கலாம்.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன் மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் நிதானமாக பேசுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதால் கடன்களைத் தவிர்க்கலாம். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதாக குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும்.

தொழில் வியாபாரம்

ALSO READ  IRCTC இணையதளத்தில் ரயில் முன்பதிவு இறுதி நிலவரம் அறியலாம்: புதிய வசதி அறிமுகம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் நான் சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.கடன் உதவிகள் தாமதப்பட்டாலும் தக்க சமயத்தில் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு அவர்களை சற்று அனுசரித்து நடந்துகொள்வது நல்லது .எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள்.

உத்தியோகம்

ALSO READ  நெல்லையப்பர் கோவிலுக்கு -இந்திய உணவு பாதுகாப்பு கழகம் விருது

நீங்கள் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைத்தாலும் அதிக நேரம் உழைக்க நேரிடும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் எதையும் சமாளித்து முன்னுக்கு வரமுடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டு வெளியூர் செல்ல நேரிடும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும்.நீங்க போட்ட முதலீட்டினை எடுப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் .அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடந்த கால பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் அடைவீர்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த தயாநிதிமாறன்…

naveen santhakumar

சிவப்பு மண்டலத்தில் எவையெல்லாம் அனுமதிக்கப்படும்?? இவையெல்லாம் அனுமதிக்கப்படாது??….

naveen santhakumar

லடாக் எல்லையில் T-90 Bhishma பீரங்கிகள்- இந்திய ராணுவம் 

naveen santhakumar