ஜோதிடம்

2020 ஆம் ஆண்டு மீன ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சுறுசுறுப்பாக இருப்பீர்கள் நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து விடுவார்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். காரியங்கள் நடைபெற்று உங்களின் கடமைகளை நிறைவேற்றி திருப்தி அடைவீர்கள்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தைப் பொறுத்தவரை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும் இதுவரை இருந்த வந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வீட்டில் நிம்மதி நிலவும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்து வீடு மனை வண்டி போன்றவற்றை நிலை உண்டாகும்.

தொழில் வியாபாரம்

ALSO READ  2020 ஆம் ஆண்டு மகர ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

தொழிலில் இதுவரை இருந்த மறைமுக போட்டிகள் விலகி தொழிலில் மேன்மை அடைவீர்கள்.வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் லாபத்தை ஏற்படுத்தும். முதலாளிதொழிலாளி இடையே உள்ள உறவு வெற்றிகரமாக அமைந்து மேலும் மேலும் முன்னேற்றத்தை உண்டாக்கும்.கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு செய்யும் பணியில் திருப்தியான நிலை இருக்கும்.எதிர்பார்த்த இட மாற்றங்களும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பு உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினை பெற்று உயர்வடைவார்கள்.

ALSO READ  2020-ம் ஆண்டு கும்ப ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிக சிறப்பாக இருக்கும் விளைபொருட்களுக்கு சற்று கூடுதலான விலை சந்தையில் கிடைக்கும் .அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் . வீடு, மனை ,நிலம் வாங்கி சேர்ப்பீர்கள். பங்காளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அன்று ‘டிண்டர்’ ஆப்பில் இருந்து விலகிய சாதாரண பெண்..இன்று பில்லினியர்..!  

News Editor

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராக சோனியா காந்தி அழைப்பு

News Editor

டோல்கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க?

Admin