ஜோதிடம்

விதியை மதியால் வெல்லலாம் எப்படி?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஓர் எலி எப்பொழுதும் துயரத்துடன் காணப்பட்டது. ஏனெனில் பூனைகளின் மீது அதற்கு இருந்த பயத்தால்.

அந்த எலி ஒரு முனிவரிடம் சென்று, தனது துன்பத்தை அவரிடம் கூறியது. இதைக்கேட்டு எலியின் மீது பரிதாபம் கொண்ட முனிவர் அதை ஒரு பூனையாக மாற்றினார்.

இப்பொழுது பூனையான அந்த எலியை நாயைக் கண்டு அஞ்ச துவங்கியது, மீண்டும் முனிவரிடம் சென்று தன்னை ஒரு நாயாக மாற்றும்படி வேண்டியது.

முனிவரும் அதை ஒரு நாயாக மாற்றினார். இப்பொழுது அந்த நாயாக மாறிய எலி புலியை கண்டு அஞ்ச துவங்கியது.

மீண்டும் சென்றது முனிவரிடம், தன்னை ஒரு புலியாக மாற்ற வேண்டியது. புலியாக மாறியது அந்த எலி. இப்பொழுது வேட்டைக்காரனை எண்ணி மீண்டும் வேதனை கொண்டது. அந்த முனிவரிடம் மீண்டும் சென்றது. தனக்கு ஏற்பட்ட பயத்தை மந்திரவாதியிடம் கூறியது. எலியின் பயத்தை கண்டு வெறுத்துப்போன மந்திரவாதி மீண்டும் அதை எலியாகவே மாற்றினார்.

ALSO READ  சுரங்கப்பாதைக்குள் புகுந்த வெள்ளம்...சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.....

அந்த முனிவர் அந்த எலியிடம் ‘நான் என்ன செய்தாலும் அது உனக்கு உபயோகமாக இருக்கப்போவது இல்லை, ஏனென்றால் உனக்கு எப்போதும் ஒரு எலியின் மனம் தான் இருக்கிறது என்று கூறுனார்.

இவ்வாறாக தான் ஒவ்வொரு மனித மனதிலும் ஒரு எலி குடிகொண்டுள்ளது. இந்த பூமியில் வாழும் மனிதர் அனைவருக்கும் மனக்குறை என்பது நிச்சயம் உண்டு சிலர் வேகமில்லையே என்று வருந்துவர்; சிலரோ வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று வருந்துவார்.

ALSO READ  10 வருடத்துக்கு ஒரு ஹிட் கொடுப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கர் எனக்கு முக்கியமல்- பாலகிருஷ்ணா சர்ச்சை

சிலர் செல்வம் இருந்தும் நிம்மதியற்று இருப்பர்; சிலருக்கு அச்செல்வம் இல்லையே என்ற வேதனையும் உண்டு.

அனைத்தையும் பெற்ற மனிதரையே இந்த அவனியில் நாம் சந்தித்தது உண்டா?? குறையோடு வாழும் மனிதர்கள் அந்த குறையை தனது வாழ்வின் மையமாக கொண்டு வாழ்கின்றனர்.

இதனால் துக்கமும் வேதனையும் நம்மை ஆட்கொள்கிறது. இந்த வேதனை நமது ஜனனத்திலிருந்து மரணம் வரை நம்மை தொடர்கிறது.

ஆனால் ஒரு சிலரோ உருவான குறையை தமது சாமர்த்தியம் கொண்டு வெல்கின்றனர். குறை ஏற்படுவது என்பது விதிப்பயன், எவர் ஒருவர் தமது மதி கொண்டு அதை வெல்கிறாரோ, அவரே மதிக்கப்படுவார். சிந்தித்து செயலாற்றுங்கள்.!!!


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வினை தீர்க்கும் விநாயகரை வழிபடும் முறை!!… 

naveen santhakumar

பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம்…..

naveen santhakumar

சீரம் நிறுவனத்தில் தீ விபத்து..!

News Editor