ஜோதிடம்

இனி Default App ஆகிறது ஆரோக்கிய சேது App…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா தொடர்பான தகவல்கள் அடங்கிய ஆரோக்கிய சேது செயலி அனைத்து ஸ்மார்ட் செல்போன்களுக்கும் கட்டாயமாக்கப்பட உள்ளது.

இந்திய அரசாங்கத்தின் கோவிட்-19 டிராக்கர் ஆப் ஆரோக்கிய சேது. இந்த செயலியை ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களிடம் புதிய செல்போன்களில் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்ட போதும் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய போது பிரதமர் மோடி, இந்த செயலியை பிரபலப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். தென் கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் இதுபோன்ற செயலிகளின் உதவியால் கொரோனா பாதிப்புகளை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சையளித்ததால் ஏற்பட்ட பலன்களை மோடி சுட்டிக் காட்டியுள்ளார்.

ALSO READ  இதுல இவ்ளோ சாஸ்திரம் இருக்கா????

மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை தங்கள் செல்போன்களில் டவுன்லோடு செய்யுமாறும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மிகவேகமாக பதிவிறக்கமாகும் இந்த செயலியை இதுவரை 5 கோடிக்கும் மேற்பட்டோர் இணைத்துள்ளனர்.

இதனிடையே, மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் ‘ஆரோக்கிய சேது’ மொபைல் செயலியை (ஆப்) உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஏழு ஜென்ம பாவங்களையும் தீர்க்கக்கூடிய பச்சரிசி :

Shobika

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு- பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது

naveen santhakumar

பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம்…..

naveen santhakumar