ஜோதிடம்

பிரபலங்களை துரத்தும் கொரோனா; மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி !

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து உருவாகிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. அதனையடுத்து உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு மருந்து கண்டுபிடித்து அதனை மக்களுக்கு செலுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் வருகின்றனர். கொரோனா தாக்கம் குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டு வேகம் எடுக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடிகர் ஆஷிஷ் வித்தியார்த்திக்கு தற்போது கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் வெளியான தில் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனையடுத்து கில்லி, என்னை அறிந்தால், ஆறு, அனேகன் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். இந்நிலையில் தற்போது இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் தங்களின் வருத்தத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். 

ashish vidyarthi

இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் ஆஷிஷ் வித்தியார்த்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இது நான் விரும்பாத ஒன்று. நான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். கரோனா அறிகுறிகள் இல்லை. விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன். உங்கள் வாழ்த்துகளும், அன்பும் விலைமதிப்பற்றவை. பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளார். 

Related posts

2020 ஆம் ஆண்டு ரிஷப ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

Admin

ரவுடியின் தலையை வெட்டி போலீஸ் நிலையத்தில் வைத்த கும்பல்…

naveen santhakumar

சீரம் நிறுவனத்தில் தீ விபத்து..!

News Editor