ஜோதிடம்

ஸ்படிக மணி மாலை அணியும் முறை; யார் அணியலாம் யார் அணியக்கூடாது?? 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஸ்படிக மணி மாலை என்றால் என்ன?

ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன நீர், பாறைகளாக உருமாறி இருக்கும். அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களைத் தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம். உருண்டையாக தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம்.

யார் அணியலாம்:-

ஸ்படிக மாலையை யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். ஆனால் மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல் இரவு நேரத்தில் ஸ்படிக மணி மாலையை அணியக்கூடாது. மேலும் தரையில் மட்டுமே ஸ்படிகத்தை வைக்க வேண்டும்.

பொதுவாக ஒருவர் அணிந்த ஸ்படிகம் ஆடையை மற்றொருவர் அணியலாம் என்ற கேள்வி அனைவருக்கும் எழும். தாராளமாக ஒருவர் அணிந்த ஸ்படிக மாலையை  மற்றொருவர் அணியலாம். ஆனால் மற்றொருவரின் ஸ்படிக மாலையை மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 4 மணி நேரமாவது ஊறவிட வேண்டும்.

காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும் போது அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன் வசம் இழுத்துக் கொள்ளும்.

ALSO READ  அதிர்ச்சி தகவல்...!!!!!ஐஸ் கிரீமில் கொரோனாவா....??????

ஆகவே இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும். அப்போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். அந்த தருணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறை வதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்களுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.

ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல்லது தங்கத்துடன் இணைத்தோ அணியலாம். அதேபோல் அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம். 

மேலும்  ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது ஈர்ப்பு சக்தி நன்றாக இருக்கும்.

ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து கோர்த்து அணியக்கூடாது. அது ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக்கூடாது.

ஸ்படிகமணி மாலை அணிவதன் பயன் என்ன?

மனிதர்களாகிய நாம் ஒருநாளில் விடும் மூச்சின் எண்ணிக்கை சராசரியாக 21,600 முறையாகும். ஸ்படிக மணி, ஒரு மணி நேரத்திற்கு 21,600 அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. அப்படியானால் நம் கழுத்தில் அணியும் 108 ஸ்படிகமணிகள் கொண்ட மாலை, எவ்வளவு அதிர்வலைகளை நம்மைச் சுற்றிலும் பரவிடச் செய்யும் என்று எண்ணிப் பாருங்கள். இதனால் தெய்வ அருள், மன அமைதி, சாந்தம், நல்ல சிந்தனை, தெளிவான அறிவு, தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும்.

ALSO READ  18 வயசுல இவ்வளவு திறமையா?... விருதுகளைக் குவித்த பாப் பாடகி

ஸ்படிக மாலை உடல் சூட்டை சீரான அளவில் இருக்க வைக்கும். நமது மனதை அலைபாயும் பீட்டா நிலையில் இருந்து, அமைதியான ஆல்பா நிலைக்கு அழைத்துச் செல்லும். ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கு, ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.

ஸ்படிக மாலையை நீங்கள் கழிவறை செல்லும் நேரம் தவிர, மற்ற அனைத்து நேரங்களிலும் கழுத்தில் போட்டுக் கொள்ளலாம். குளிக்கும் பொழுது, கழுத்தில் ஸ்படிக மலையோடு குளிப்பது நல்லது.

ஸ்படிக மாலையில் கை வைத்தவுடன் ஒரு வித குளிர்ச்சியை உணர்ந்தால், அது நல்ல உயர் தரமானது. உயர்ந்த வகை ஸ்படிகமணி மாலையை நீரில் போட்டால் ஸ்படிகம் கண்ணுக்குத் தெரியாது. நீரோடு நீராக ஒன்றி இருக்கும். முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என பத்தாம் தரம் வரை ஸ்படிக மாலைகள் கிடைக்கின்றன. முதல் தர ஸ்படிகமணி மாலை தான் நல்ல பலனைத் தரும். பார்த்துக் கொண்டே இருக்கச் செய்யும் வசீகர தன்மை ஸ்படிகத்திற்கு உண்டு.

ஸ்படிக மாலையை கையில் வைத்து இறைவன் பெயரை உச்சரித்தபடி தியானத்தில் ஈடுபடலாம்.



Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊரடங்கால் சென்னையில் சிக்கி தவித்த ரஷ்ய நாட்டு சிவபக்தர்- மாநகராட்சி அதிகாரிகள் அடைக்கலம்

naveen santhakumar

மீண்டும் சர்ச்சை: ஆடைகளின்றி உடலில் குழந்தைகள் ஓவியம் வரைவது போல் வீடியோ வெளியிட்ட பாத்திமா ரெஹானா… 

naveen santhakumar

“பிரபாகரன்” பெயர் சர்ச்சை: நடிகர் துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கோரிய பிரசன்னா….

naveen santhakumar