ஜோதிடம்

திப்பு சுல்தான் தந்தையோட ராணுவ தளபதியின் கல்லறை.. தமிழகத்தில் எங்க இருக்கு தெரியுமா???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கிருஷ்ணகிரி நகரின் பெருமை உலக
பிரசித்திபெற்றது. கிருஷ்ணகிரி நகரில் புகழ் பெற்றவர்கள் பலர். அதில் முக்கியமானவர் மீர் குலாம் அலி மிரியம்.

சரி, யார் இந்த மீர் குலாம் அலி மிரியம் ??

மிர் குலாம் அலி மரியம் 1758 முதல் 1863 வரை வாழ்ந்தவர். திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் மூத்த இராணுவத் தளபதியாக பணியாற்றியவர் மீர் குலாம் அலி மிரியம்.

Hyder Ali

இவர் திப்பு சுல்தான் காலத்தில் ஒட்டோமான் சாம்ராஜ்யத்திற்கு தூதுவராக கான்ஸ்டாண்டிநோபிள் நகருக்கு ஒரு குழுவை அழைத்துச் சென்றவர். துருக்கியில் உள்ள மைசூர் தூதரகத்தின் தலைவராக இருந்துள்ளார்.

அங்கிருந்து பின்னர் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் 1785 – 1786 ஆம் ஆண்டுகளில் தூதரகத்தின் தலைவராக பதவி வகித்தார்.

ALSO READ  பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம்.....
குலாம் அலிக்கு 16-ம் லூயி வழங்கிய பதக்கம்.

நரம்பு பிரச்சனை (Sciatica) காரணமாக இவரது கால்கள் பாதிப்படைந்தது (Lame). இதைதெரிந்து கொண்ட திப்புசுல்தான் இவருக்காக பிரத்தியேகமான மூலிகை எண்ணையை அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் “லங்டா குலாம் அலி” (Langda Ghulam Ali) என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்படுகிறார்.

Tipu Sultan.

பின்னர் 1816 ஆம் ஆண்டு இவர் கிருஷ்ணகிரியின் முதல் தாசில்தார் என்பதும் சிறப்பு மிக்க செய்தியாகும். மேலும் கரூரிலும் இவர் தாசில்தாராக பணியாற்றி உள்ளார். பின்னர் 1854 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். 1863 ஆம் ஆண்டு இவர் தனது 105 வயதில் மரணமடைந்தார்.

ALSO READ  மர்மங்கள் நிறைந்த குகை கோயில்...

கிருஷ்ணகிரியில் உள்ள ஷாஹி மஸ்ஜித் கோட்டையின் (Shahi Masjid Ford) தெற்குப் புறம் இவரது சமாதி அமைந்துள்ளது அங்கு உள்ள கல்வெட்டுக்கள் மூலமாக மீர் குலாம் அலி மரியம் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாளைக்கு சனிக்கிழமை…..அப்போ இத கண்டிப்பா பண்ணுங்க….

naveen santhakumar

“தீர்க்க சுமங்கலி பவ” என்றால் என்ன…?

naveen santhakumar

விசாரணை கைதிகளை போலீஸ் ஸ்டேசன் அழைத்து செல்ல தடை- டிஜிபி திரிபாதி…

naveen santhakumar