ஜோதிடம்

ஊரடங்கு: 150 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற 12 வயது சிறுமி மரணம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிஜப்பூர்:-

தெலுங்கானாவில் இருந்து மூன்று நாட்களாக 150 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற 12 வயது சிறுமி உடல் சோர்வு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடல் நீர் இழப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் கண்ணைகுடா (Kannaiguda) கிராமத்தில் உள்ள மிளகாய் தோட்டம் ஒன்றில் இடம்பெறும் தொழிலாளர்கள் (Migrant Workers) பலர் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் ஜம்டனலோ மக்டம் (Jamlo Makdam) என்ற 12 வயது சிறுமியும் வேலை செய்து வருகிறார்.

ஊரடங்கு உத்தரவு வரும் மே மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது காரணத்தால் வேலை இழந்து தவித்து வந்த இந்த தோட்டத் தொழிலாளர்கள் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி வாகன வசதிகள் ஏதும் இல்லாத காரணத்தால் நடந்தே தங்களது சொந்த கிராமங்களுக்கு செல்ல முடிவெடுத்தனர். இதையடுத்து ஏப்ரல் 15ஆம் தேதி மற்ற தொழிலாளர்களின் கிளம்பியுள்ளார். மூன்று நாட்கள் தொடர் நடைபயணமாக 150 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற சிறுமி சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் பந்தர்பால் (Bhandarpal) கிராமம் அருகே சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இக்கிராமம் இவர் சொந்த ஊரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பிஜப்பூர் மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் சுகாதார துறை அதிகாரி B.R. புஜாரி கூறுகையில்:-

ALSO READ  ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கியது ஆஸ்திரேலிய அரசு :

இந்த சிறுமி சரியான ஊணுறக்கமின்றி 150 கிலோ மீட்டர் தூரம் நடந்தே பயணம் செய்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று காலையில் சிறிது உணவு எடுத்துள்ளார். பிஜபூர் அருகே பந்தர்பால் கிராமத்திற்கு வந்தபோது வயிற்று வலி மற்றும் உடல் சோர்வாக இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து 18-ம் தேதி காலை 10 மணியளவில் சிறுமி உயிரிழந்துள்ளார் என்றார்.

ALSO READ  சீனாவிற்கு எதிராக இந்தியா உருவாக்கியுள்ள 'Milk-Tea' கூட்டணி…

மேலும் கூறிய புஜாரி சிறுமியின் உடலை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. அவர் நீரிழப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, உடல் சோர்வு காரணமாகவே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மற்ற தொழிலாளர்கள் விசாரித்த போது சிறுமி சரியாக உணவு எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்கள்.

இதனிடையே, அம்மாநில அரசு இறந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல் முறையாக வெளிநாட்டிற்கு சிறப்பு பார்சல் ரயில் அனுப்பிய இந்தியா… 

naveen santhakumar

திருப்பதியில் இரண்டு நாட்கள் மட்டும் சொர்க்க வாசல் திறப்பு

Admin

மாசி மாத பலன்கள்… படிப்படியாக முன்னேறும் சிம்ம ராசிக்காரர்களே…

Admin