ஜோதிடம்

கொரோனா வைரஸை கண்டறியும் கருவியை கண்டுபிடித்தது புனே நிறுவனம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸை கண்டறியும் கருவியை புனைவை சேர்ந்த என்ற நிறுவனம் கண்டறிந்துள்ளது- மத்திய அரசு ஒப்புதல்.

courtesy.

புனேயை சேர்ந்த மூலக்கூறு ஆராய்ச்சி நிறுவனமான MyLab நிறுவனம் மூலக்கூறுகள் மூலம் நோய் அறியக்கூடிய PathoDetect COVID-19 Qualitative (PCR kit)  என்ற கருவியை கண்டறிந்துள்ளது

MyLab நிறுவனம் தயாரித்த இந்த புதிய கருவிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து இன்று முதல் இந்த கருவி பயன்பாட்டுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவி மூலமாக ஒரு வாரத்தில் ஒரு லட்சம் பேர் வரை பரிசோதனை செய்ய முடியும். அதேபோல் ஒரே நேரத்தில் 100 பேருக்கு உடனடியாக பரிசோதனை செய்து முடிவுகளை தெரிவிக்க முடியும். சராசரியாக ஒரு கருவியின் மூலமாக ஒரு நாளைக்க ஆயிரம் பேர் வரை பரிசோதனை செய்யலாம். மேலும் இந்த கருவியின் விலை 80 ஆயிரம் ரூபாய் தான்.

இந்தக் கருவி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்போடும், உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் நோய் பரவல் மற்றும் தடுப்பு மையத்தின் (Centres for Disease Control and Prevention (CDC)) வழிகாட்டுதலின் படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹஸ்முக் ராவல் தெரிவித்தார்.

ALSO READ  அஜித், சூர்யாவை தொடர்ந்து கொரோனா நிதியுதவி அளித்த ரஜினிகாந்த் !

தற்போது உள்ள வழிமுறைகளின் மூலமாக கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய 71/2 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் இந்த கருவி மூலமாக இரண்டரை மணி நேரத்திற்குள் வைரஸ் தொற்றை கண்டறிய முடியும்.

இத்தனை நாட்களாக இந்தியா ஐரோப்பிய நாடுகளை குறிப்பாக ஜெர்மனியை இதுபோன்ற பரிசோதனைகளுக்காக சார்ந்து இருந்தது. தற்போது முதன் முறையாக இந்தியா நிறுவனம் ஒன்று முழுக்க முழுக்க இந்தியாவிலேயே ஒரு பரிசோதனைக் கருவியை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸ் பரவல்…. தனது வலிமையைகாட்டும் வடகொரிய அதிபர் கிம்….

naveen santhakumar

மாசி மாத பலன்கள்… வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் கடக ராசிக்காரர்களே..

Admin

விரைவில் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்கும் சாம்சங் கேலக்ஸி F 22 ஸ்மார்ட்போன்….

Shobika