ஜோதிடம்

மனித சிறுநீரைக் கொண்டு நிலவில் தயாராகும் கான்கிரீட்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெர்லின்:-

ஐரோப்பிய விண்வெளி  ஆய்வு நிறுவனம் , நிலவில்  கான்கிரீட் கட்டிடம் உருவாக்குவதில் மனித சிறுநீரை ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்துள்ளது. 

இது தொடர்பாக வெளியான செய்தியில், மனித சிறுநீரில் காணப்படும் யூரியா, அதன் உறுதியான இறுதி வடிவத்தில் கடினமாவதற்கு முன்பு “சந்திர கான்கிரீட்” (Lunar Concrete) கலவையை மிகவும் இணக்கமாக மாற்றும் என்று கூறப்பட்டுள்ளது.  

ALSO READ  விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள சூரிய வளி மண்டலத்தின் சிக்கலான புகைப்படங்கள்....
3D printing of Lunar Concrete.

மேலும் இவை நீர் தேவையை குறைக்க  உதவும்,பிளாஸ்டிக் சைசர்களை விட சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

லூனார் கான்கிரீட்டை உருவாக்குவதில் முக்கிய மூலப்பொருள் நிலவின் மேற்பரப்பில் காணப்படும் தூளாக்கப்பட்ட மண் தான் இது லூனார் ரெகோலித் (Regolith) எனப்படும்.

சிறுநீரில் உள்ள யூரியா ஹைட்ரஜன் பிணைப்புகளை சுலபமாக உடைத்து, நீர்மங்கள் (Fluids) கலப்பதில் பாகுதன்மையை (Viscosity) குறைத்து விடும்.

ALSO READ  மாசி மாத பலன்கள்…அதிர்ஷ்டசாலியான மிதுன ராசிக்காரர்களே...

பூமியில் யூரியா கெமிக்கல் மற்றும் மெடிக்கல் கம்பெனிகளில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது.  மேலும் உரங்களை பொறுத்தவரையில் யூரியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளில் 1.5 லிட்டர் (3.2 Pints) திரவக் கழிவுகளை வெளியிடுகிறான். எனவே விண்வெளி ஆராய்ச்சியில் மனித சிறுநீர் மிக முக்கிய பொருளாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பூசியால் மேலும் ஒருவர் உயிரிழப்பு…!

News Editor

கருவூரார் எனும் கருவூர் சித்தர்

Admin

நடிகர் ரஜினிகாந்த் பயணம்

News Editor