ஜோதிடம்

மகா சிவராத்திரி தானம் : மகா புண்ணியம்..!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒவ்வோர் மாதமும் வருகிற சிவராத்திரியே சிறப்பு வாய்ந்தது என்றாலும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

மாசி மாதத்தில், தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருகிற மகா சிவராத்திரி என்பது
ஊழிக்காலத்தில் பிரளயம் ஏற்பட, உலகமே அழிந்தது.

மீண்டும் இந்த உலகம் இயங்கவேண்டும் என அன்னை பார்வதிதேவி விரதம் இருந்து, சிவனாரின் இடபாகத்தைப் பெற்றாள்.

மேலும் பிரம்மாவும் மகாவிஷ்ணுவும் சிவனின் அடியையும் முடியையும் காணாது சாபமும் பெற்றனர். இறுதியில் பிரமாண்ட நெருப்புப் பிழம்பாக, அக்னி மலையாக நின்று விஸ்வரூபமெடுத்து தரிசனம் தந்தார் ஈசன். அந்தநாள்தான் மகா சிவராத்திரி நன்னாள் என்றும் சொல்லப்படுகிறது.

இத்தகைய மஹா சிவராத்திரி வழிபாட்டில் முக்கியமான 6 அம்சங்கள் உள்ளன.

  1. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலைக் குறிக்கும்.
  2. லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.
  3. உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.
  4. தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.
  5. எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.
  6. வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.
ALSO READ  சொல்லின் செல்வர் சோ.சத்தியசீலன் காலமானார்..!

இந்த 6 அம்சங்களும் வீட்டிலாவது கோயிலிலாவது சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.

சிவனை வீ‌ட்டி‌ல் பூஜை செ‌ய்வதாக இரு‌ந்தா‌ல், மாலையில் குளித்து திருவெண்ணீறு அணிந்து, கையில் உருத்திராட்சம் மாலையுடன் சிவனை பூஜை செய்ய வே‌ண்டு‌ம்.

ALSO READ  கொரோனா பாதிப்பால் மதுபானங்களை வீட்டிற்கு டெலிவரி செய்ய அரசு முடிவு

ஐந்தெழுத்து மந்திரமான ”சிவாயநம” என்ற சிவ மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.

பூஜை செய்ய முடியாதவர்கள் 4 ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும்,சிவன் நாமத்தை சொல்லியும் அல்லது கோயிலுக்கு சென்று சிவராத்திரி அன்று பூஜைக்கு தேவையான பொருட்களை தானம் செய்து புண்ணியம் அடையளாம். அத்துடன் சிவராத்திரி இரவை கோயிலில் தங்கி இறை வழிபாட்டுடன் வணங்கலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராக சோனியா காந்தி அழைப்பு

News Editor

காகத்திற்கு உணவு வைப்பது ஏன்?? வைப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன??!! 

naveen santhakumar

விரைவில் இந்தியாவில் நத்திங் இயர் 1 இயர்பட்ஸ் அறிமுகம் :

Shobika