ஜோதிடம்

நாசா அதிரடி போட்டி அறிவிப்பு – பரிசு வெல்ல நீங்கள் ரெடியா..???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹோஸ்டன்,

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பொதுமக்களுக்கு போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.

அதாவது வீனஸ் (வெள்ளி) கிரகத்திற்கு நாசா அனுப்ப உள்ள ரோவர் ஒன்றிற்கான சென்சாரை உருவாக்கும் போட்டி அது. இந்த சென்சாரை உருவாக்குவது என்பது மிகவும் சிக்கலான மற்றும் சவாலானது.

ஏனெனில் நமது பூமியின் சகோதர கிரகமான வீனஸ் கிரகத்தில் வெப்பநிலையானது 840 டிகிரி பாரன்ஹீட்; அதோடு நமது பூமியை விட வீனஸ் கிரகத்தின் அழுத்தம் 90 மடங்கு அதிகம்.

மேலும், ரோவர் செல்லும் பாதையில் வரும் தடங்கல்களையும் இந்த சென்சார் கண்காணித்து ரோவர் எதன் மீதும் மோதாமல் பாதுகாப்பாக வீனஸில் தரையிறங்க செய்ய வேண்டும்.

ALSO READ  2 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் வெற்றி பெறுவார்...!

தற்போதுள்ள தொழில் நுட்பத்தின் படி எலக்ட்ரானிக் சென்சார்கள் அதிகபட்சமாக 250 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை வரை தாங்கும்.

அதனால்தான் சவாலான இந்த போட்டிக்கு நாசா உலகளாவிய அளவில் இந்த சென்சாரை உருவாக்கும் போட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ALSO READ  செவ்வாய் கிரகத்தின் பாறை மாதிரியை வெற்றிகரமாக சேகரித்தது பெர்சவரன்ஸ் ரோவர்..!

இந்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக 15,000 அமெரிக்க டாலரும், இரண்டாம் பரிசாக 10,000, அமெரிக்க டாலரும் மூன்றாவது பரிசாக 5,000 அமெரிக்க டாலரும் வழங்கப்படும் என்று நாசா அறிவித்துள்ளது.

இந்தப் போட்டிக்கான உங்களது ஐடியாக்களை வரும் மே 29 2020க்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்
https://www.herox.com/.

மேலும் விபரங்களுக்கு https://www.herox.com/VenusRover தொடர்பு கொள்ளவும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராக சோனியா காந்தி அழைப்பு

News Editor

வினை தீர்க்கும் விநாயகரை வழிபடும் முறை!!… 

naveen santhakumar

இன்று உலக ஈமோஜி தினம்; வேடிக்கையான சில விலங்குகளின் புகைப்படங்கள் இதோ!!!…. 

naveen santhakumar