ஜோதிடம்

கொரோனா வைரஸ் பரவல்…. தனது வலிமையைகாட்டும் வடகொரிய அதிபர் கிம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பியோங்யாங்:-

உலகமுழுவதும் கொரோனா வைரஸ் பீதியில் செய்வதறியாது திகைத்து வரும் நிலையில் வடகொரியா 2 ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

வடகொரிய தலைநகரான  பியோங்யாங் (Pyongyong) மாகாணத்தின் சன்சோன் (Sonchon) பகுதியில் குறைந்த தூரம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இந்த சன்சோன் பகுதி கொரிய தீபகற்பத்தில் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

இந்த ஏவுகணை சோதனை நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு வடகொரியாவின் சுப்ரீம் பீப்ள் அசம்ப்ளியில்  (Supreme People’s Assembly) அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். 

இந்த ஏவுகணை சோதனை குறித்து  தென்கொரிய ராணுவ தலைமை அதிகாரி கூறும்பொழுது:-

ALSO READ  தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஒத்திவைப்பு... முதல்வர் எடப்பாடி அறிவிப்பு....

உலகம் முழுவதும் கொரோனா பரவல் தடுக்க முடியாமல் தவித்து வரும் நிலையில் வடகொரியாவின் இந்த ஏவுகணை தாக்குதல் கொரிய பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. வடகொரியா உடனடியாக இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றார்.

ALSO READ  ஊழியர்களின் ஓய்வை ‘ஓசி’யில் கேட்பதா??அமேசானை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.....

இந்த ஏவுகணை சோதனை நேற்று காலை 6:30 மணி முதல் 7 மணி அளவில் நடைபெற்றதாக தெரிகிறது. இந்த சோதனையில் வடகொரியாவில் முழுவதுமிருந்து 700 உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் கொரோனா பரவலுக்கு இடையில் தனது இராணுவ வலிமையை காட்டுவதற்காக வடகொரிய அதிபர் கிம் இத்தகைய சோதனை செய்து உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சனி பகவானை மகிழ்வித்து அவரது பாதிப்பிலிருந்து நீங்கள் விடுபட வேண்டுமா??????அப்போ இந்த ஸ்லோகத்தை டெய்லி சொல்லுங்க :

naveen santhakumar

விசாரணை கைதிகளை போலீஸ் ஸ்டேசன் அழைத்து செல்ல தடை- டிஜிபி திரிபாதி…

naveen santhakumar

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை -அரசாணை வெளியீடு

naveen santhakumar