ஜோதிடம்

கொரோனா வைரஸ் ஆராய்ச்சிக்கு 3.7 மில்லியன் டாலர் வழங்கிய அமெரிக்கா ….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலக அளவில் கொரோனா வைரஸால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. இந்நிலையில் சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆம், கொரோனா குறித்த ஆராய்ச்சிக்கு அமெரிக்கா 30 கோடி வழங்கி உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் வூஹான் நகரிலுள்ள ஹுவானான் (Huanan) என்ற இறைச்சி சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் பரவியது. இந்நிலையில் இந்த சந்தைக்கு அருகே உள்ள P4 வூஹான் வைராலஜி ஆய்வு மையத்திலிருந்து வைரஸ் பரவியதாக நம்பப்படுகிறது. 

இந்நிலையில் வூஹான் நகரில் அமைந்துள்ள இந்த வைராலஜி ஆய்வு மையத்திற்கு கொரோனா வைரஸ் குறித்த ஆய்வினை மேற்கொள்வதற்காக அமெரிக்காவின் தேசிய சுகாதார மையம் (National Institute Of Health) 3.7 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்கியது தற்போது தெரியவந்துள்ளது.

வூஹானிலிருந்து ஆயிரம் மைல் தொலைவில் உள்ள யுனான் மாகாணத்தில் உள்ள குகைகளில் இருந்து பிடித்துவரப்பட்ட குதிரைலாட (Horse Shoe) வவ்வால்களை கொண்டு கொரோனா மரபணு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில், வவ்வால்களுக்கு கொரோனா வைரசின் மரபணு வரிசைமுறை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வு மையம் வூஹான் நகரில் உள்ள ஹுவானான் இறைச்சி சந்தையில் இருந்து 20 மைல் தொலைவில் உள்ளது. இந்த சந்தையில் இருந்துதான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இந்த ஆய்வக விஞ்ஞானி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் மூலமாக வூஹான் நகரில் இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்றும் மற்றொரு அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கிறது.

ALSO READ  சீரம் நிறுவனத்தில் தீ விபத்து..!

இதுகுறித்து கூறிய அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் மேட் கேட்ஸ்:-

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவ காரணமான வூஹான் ஆய்வுமையம் தான்.  அமெரிக்க அரசாங்கம் விலங்குகளின் மீது நடத்தப்படும் மிகக் கொடூரமாக அதேசமயம் மிகவும் ஆபத்தான ஆராய்ச்சியை மேற்கொள்ளும் ஆய்வு மையத்திற்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக நிதி உதவி அளித்து வந்துள்ளது என்பதை அறியும் பொழுது மிகவும் அவமானகரமான உள்ளது. 

US pressure group White Coat Waste தலைவர் ஆன்டனி பல்லோட்டி கூறுகையில்:-

மக்களின் வரிப்பணம் இதுபோன்ற கொடூர ஆராய்ச்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் பயன்படுத்தி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. விலங்குகளை கொடுமைப்படுத்தி இது போன்ற வைரஸ்களை செலுத்திய ஆராய்ச்சி செய்யும் சீனாவில் உள்ள ஆய்வகங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்து வருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

2002-2003ல் சார்ஸ் வைரசால் சீனா கடுமையான பாதிப்பை சந்தித்ததும், கொடூரமான வைரஸ்களை பற்றி ஆய்வு நடத்த வூஹானில் இந்த ஆய்வகம் கட்டப்பட்டது.

ALSO READ  கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மாளிகைக்குள் பதுங்கிய அதிபர்...

யுனான் மாகாணத்தில் உள்ள கன்மிங்க் (Kunming) என்ற குகையில் இருந்து தான் பல ஆண்டுகாலமாக வவ்வால்கள் பிடித்து வரப்பட்டு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை பல்வேறு தடவை வவ்வால்கள் பிடித்து வரப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு உள்ளது.

Kunming Cave

சீனாவின் “வவ்வால் பெண்மணி” என்று அழைக்கப்படும் ஷி ஸெங்லி (Shi zhengli) பல்வேறு அபாயகரமான குகைகளில் தங்கி வவ்வால்களை பிடித்து பல்வேறு ஆராய்ச்சிகள் செய்துள்ளார். இந்தப் பெண்மணி வூஹானில் உள்ள அந்த ஆய்வு மையத்தில் தான் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். 

இவரும் இவரது குழுவினரும் கடந்த ஜனவரி மாதத்திலேயே புதுவித வைரஸ் ஒன்று சீனாவில் பரவி வருவதாகவும், அது மனிதர்களை தாக்கும் என்றும் கூறினார்கள். ஆனால் அதே தினத்தில் சீன அரசு மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவாது என்று மறுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த பெண்மணி பல ஆண்டுகளாக சார்ஸ்-கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை வவ்வால்களில் செய்து வந்த காரணத்தால் இவர் “வவ்வால் பெண்மணி” என்று அழைக்கப்பட்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நம்ம சிம்புவா இது..???? வாயை பிளக்கும் ரசிகர்கள்…..!!!!

Shobika

ஸ்படிக மணி மாலை அணியும் முறை; யார் அணியலாம் யார் அணியக்கூடாது?? 

naveen santhakumar

நம் வாழ்வை மாற்ற 5 டாப் தொழில்நுட்பங்கள்

Admin