ஜோதிடம்

நாளை சூரிய கிரகணம்: பரிகாரம் யாருக்கு?? 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விண்வெளி ஆராய்ச்சியாளர்களை பொறுத்தவரையில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகியவை ஒரு சாதாரண வானவியல் நிகழ்வு. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் அது ஜோதிட அடிப்படையில், ஒரு மனிதனை பாதிக்கக் கூடிய அல்லது பலன்களைத் தரக் கூடிய நிகழ்வாக பார்க்கின்றனர். பெரும்பாலும் இந்த கிரகணங்கள் தீங்கு விளைவிக்கக் கூடியதாக நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நாளை சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. இந்த சூரிய கிரகணம் நாளை 10:22 முதல்  01:32 மணி வரை நீடிக்க உள்ளது. 

நாளைய ஏற்பட போகும் கங்கண சூரிய கிரகணம் வழக்கத்தைவிட அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு காரணம் தற்போதைய உலகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை.

ALSO READ  விவசாயி இடமிருந்து ரூ.17 லட்சத்தை திருடிய ஹேக்கர்கள்… 

இந்நிலையில் சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

அதேபோல கிரகண நேரத்தில் யாரும் சாப்பிட வேண்டாம் என்றும், அந்த நேரத்தில் யாரும் வெளியே சென்று சூரியனை வெறும் கண்ணால் காண வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல இந்த சூரிய கிரகணத்தின் போது பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் யார், யார்??

ஞாயிறு அன்று பிறந்தவர்கள், ரோகிணி நட்சத்திரம், மிருகசீரிஷம், திருவாதிரை, சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், அதேபோல ஜாதகத்தில் சூரியனின் திசை மற்றும் சூரியனின் புத்தி உள்ளவர்களும் நாளை பகல் 2 மணிக்கு பிறகு, கல் உப்பைத் தண்ணீரில் போட்டு குளிக்க வேண்டும்.

ALSO READ  மகர ராசிக்கான தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2020...

இந்த ராசிகாரர்கள் கோதுமை தானம் வழங்கலாம்.

மேலும் இவர்கள் இஷ்ட தெய்வங்களின் மந்திரங்களை தாராளமாக ஜெபிக்கலாம். 

இதேபோல குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களுக்கு காணிக்கை எடுத்து வைத்து கோயில் திறந்த பின்னர் அவற்றை செலுத்தலாம்.

அதேபோல, நாளை ஏற்படப் போகிற இந்த சூரிய கிரகணம் கொரோனா வைரஸ் கிருமிகளை கொள்ளுமா? என்று பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் அவ்வாறு எதுவும் நிகழ வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளுத்து வாங்கும் மழை- தத்தளிக்கும் சீனா ..!

naveen santhakumar

தல 61 அப்டேட்: மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி…!

naveen santhakumar

திருப்பதி ஏழுமலையானை எவ்வாறு அழைக்க வேண்டும் தெரியுமா??? 

naveen santhakumar