ஜோதிடம்

நாட்டில் அமைதி நிலவ வேத மந்திரங்கள் முழங்க சாந்தி யாகம் நடத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:-

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வேண்டுகோளுக்கிணங்க அதிபர் மாளிகையில் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

அமெரிக்காவை, கொரோனா வைரஸ் புரட்டிபோட்டு வரும் நிலையில், அங்கு தேசிய வழிபாட்டு தினம் (Nation Day Of Prayer Service) கடைப்பிடிக்கப்பட்டது. 

இதையொட்டி அமெரிக்காவில் அமைதி நிலவ வேண்டியும், மக்கள் நோய்தொற்றிலிருந்து விடுபட்டு அமைதியா வாழ வேண்டியும், தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள வெள்ளை மாளிகையில் ரோஸ் கார்டனில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லாமான வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நியூ ஜெர்சியில் உள்ள சுவாமி நாராயண் கோவிலின் புரோகிதர் ஹரிஷ் பிரம்பாத் இந்த பூஜைக்கு வந்திருந்தார். 

ALSO READ  விநாயகர் எலியை வாகனமாக கொண்டுள்ள காரணம் என்ன? எலியை தவிர விநாயகரின் மற்ற வாகனங்கள்?? 

அப்போது உலக மக்களின் நலனுக்காகவும், அமைதிக்காகவும், புனித வேத மந்திரங்களை முழங்கி ஹரிஷ் பிரம்பாத் சாந்தி பாத் (Shanti Path/ Peace Prayer) சிறப்பு பூஜை செய்தார். இவை யஜுர் வேதத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

courtesy.

அமெரிக்காவில் இது நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கமாகும் 1863ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் மக்கள் அனைவரும் ஒன்று கூடி வழிபாடு நடத்தினால் அதன் மூலம் நன்மை கிட்டும் என்றும் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும் கூறினார். 

ALSO READ  வினை தீர்க்கும் விநாயகரை வழிபடும் முறை!!... 

பின்னர் 1952ஆம் ஆண்டு முதல் தேசிய வழிபாட்டு தினம் அமெரிக்காவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மஞ்சள் தாலி கயிறின் பின்னால் இருக்கும் மகத்துவம்:

naveen santhakumar

2020 ஆம் ஆண்டு மீன ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்..

Admin

சொல்லின் செல்வர் சோ.சத்தியசீலன் காலமானார்..!

naveen santhakumar