ஜோதிடம்

NEET போன்று கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் இனி நுழைவுத் தேர்வு????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கலை, அறிவியல் படிப்புகளுக்கும் தேசிய மற்றும் மாநில அளவில் நுழைவுத்தேர்வு நடத்த பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சிறப்பு குழு பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதேசமயம், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நிலுவையில் உள்ள வருடாந்திர,பருவத்தேர்வுகள் மற்றும் கல்வி காலஅட்டவணை(academic calendar) போன்றவற்றிற்கான வழிகாட்டுதல்கள் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு விரைவில் வெளியிடப்படும் என UGC  தெரிவித்துள்ளது.

இதனிடையே, கொரோனா முடக்கத்தை கருத்தில் கொண்டு கற்றல் – கற்பித்தல் நடைமுறை, தேர்வுகள், சேர்க்கை, கல்வியாண்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள், பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஹரியாணா மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குஹத் மற்றும்

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வர் ராவ் தலைமையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டது.

இந்த குழுவானது தனது பரிந்துரைகளை அறிக்கையாக கடந்த 24ஆம் தேதி பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யூ.ஜி.சி.) சமர்ப்பித்துள்ளது. 

அதில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தேசிய மற்றும் மாநில அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

ALSO READ  மூன்றாண்டு படிப்பு, 2 ஆண்டு படிப்பாக மாற்றம்…

மேலும், ஜூலைக்கு பதிலாக கல்வியாண்டை செப்டம்பர் மாதத்தில் தொடங்கலாம் எனவும், ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்த வசதி இருக்கும் பட்சத்தில் ஆன்லைன் மூலமாக தேர்வை நடத்தலாம், இல்லையென்றால் பொது முடக்கம் முடியும் வரை காத்திருந்து பின்னர் தேர்வு நடத்துவதற்கான தேதி குறித்து முடிவெடுக்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலமான மே மாதம் 15ஆம் தேதி வரை வகுப்புகள் எடுக்க வேண்டும். ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை விட வேண்டும். 

ஜூலை மாதத்தில் தேர்வுகளை நடத்தி ஆகஸ்ட் மாதம் மாணவர் சேர்க்க நடத்தி செப்டம்பர் மாதத்தில் கல்வியாண்டை தொடங்கலாம் எனவும் அக்குழு பரிந்துரைத்துள்ளது. 

நுழைவுத் தேர்வை நடத்துவதில் தாமதம் மற்றும் நிலுவையில் உள்ள இறுதித் (Board Exams) தேர்வுகள் உள்ளிட்டவைகள் அடுத்த கல்வியாண்டை தொடங்குவதில் மற்றொரு தடையாக இருக்கிறது எனவும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

இனி வருங்காலங்களில் இதுபோன்ற பேரிடர்களை எதிர்கொள்ள ஆன்லைன் முறைக்கு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தயாராக வேண்டும் எனவும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.

எனினும், இந்த குழுவின் அனைத்து பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 

இதில் இடம்பெற்றிருக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்து நிலைமையை மனதில் வைத்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

ALSO READ  BSNL நிறுவனத்தின் மிக குறைந்த விலையில் புதிய பிரீபெயிட் சலுகை :

NEET, J.E.E.க்கான நுழைவுத்தேர்வு மட்டுமே ஜூன் மாதத்தில் நடத்த வேண்டும் என்ற திட்டம் தற்போது உள்ளது. கொரோனா வைரஸ் நிலைமையை கருத்தில் கொள்வதுதான் முதன்மையானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கலை, அறிவியல் கல்லூரிகளை பொறுத்தவரையில் பெரும்பாலான கல்லூரிகள் நேரடியாக மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. சில கல்லூரிகள் தனித்தனியாக அவர்களுக்கான இடங்களை நிரப்பி கொள்வதற்கான கலந்தாய்வுகளையும், தேர்வுகளையும் நடத்துகின்றன. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களே அதிகம் பயின்று வருகிறார்கள் என்ற நிலை இருந்தது. 

ஆனால், மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு, பொறியியல் படிப்பில் வேலைவாய்ப்பின்மை போன்றவற்றால் அதன் மீதான மோகம் குறைந்து, தற்போது கலை, அறிவியல் கல்லூரிகளில் பெரும்பாலான மாணவர்கள் சேர்ந்து வருகிறனர்.

இக்கல்லூரிகளில் கல்விக்கட்டணம் குறைவு. அத்துடன் படிக்கும் போது அதிக நேரம் கிடைப்பதால் திறன்களை வளர்த்து கொள்ளவும், போட்டி தேர்வுக்கு தயாராவதும் மாணவர்களுக்கு எளிதாக காரியமாக இருக்கிறது. குறிப்பாக, படித்து முடித்ததும் மாணவர்களுக்கு பல்வேறு துறையில் வேலை வாய்ப்பு உள்ளதால் கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்காக மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இந்நிலையில், இப்படிப்புகளுக்கும் தேசிய மற்றும் மாநில அளவில் நுழைவுத்தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ள விஷயம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தினமும் இந்த மனுசன் ஒருதர் தான் மேல வா மேல வான்னு மோட்டிவேட் பண்ணுராரு!

Admin

2020 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்.

naveen santhakumar

சீனாவிற்கு எதிராக இந்தியா உருவாக்கியுள்ள ‘Milk-Tea’ கூட்டணி…

naveen santhakumar