ஜோதிடம்

நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரப்படுகின்றன- மத்திய அரசு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:-

நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலமாக நாடு முழுவதும் உள்ள 1482 கூட்டுறவு வங்கிகளும், 58 மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கணக்கில் கொண்டு வரப்படுகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள 1540 கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று மத்திய அமைச்சரவையின் காணொளிக்காட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்த கூட்டுறவு வங்கிகளில் இருப்பு வைத்துள்ள 8.6 கோடி மக்களில் 4.64 லட்சம் கோடி ரூபாய் பணம் பாதுகாப்பாக்கபடும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவரப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  இதுவரை கண்டிராத நயன்தாரா விக்னேஷ் சிவன் வீடியோ...

மேலும் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆர்டிக்கிள் 340 இன் கீழ் ஏற்படுத்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் (OBC) துணை வகைப்படுத்துதல் (Sub-Categorisation) தொடர்பான ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு அதாவது ஜனவரி 31/2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம்…..

naveen santhakumar

திருப்பதி ஏழுமலையானை எவ்வாறு அழைக்க வேண்டும் தெரியுமா??? 

naveen santhakumar

மறந்தும் கூட…… இந்த பொருட்களை யாருக்கும் தானமாக…. கொடுத்துவிடாதீர்கள்:

naveen santhakumar