ஜோதிடம்

செய்தி வாசிப்பாளர் உடையை வைத்து கிம் ஜோங் உன் உயிருடன் இருக்கிறாரா என தெரிந்து கொள்ளலாம்.. ஆச்சரிய தகவல்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ப்யோங்யாங்:-

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸை தாண்டியும் உலக அளவில் வைரலாகி வரும் ஒரு விஷயம் என்னவென்றால் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் எங்கு இருக்கிறார் ? அவருக்கு என்ன ஆனது ? அவர் உயிருடன் இருக்கிறாரா; இல்லையா ? அவரது உடல்நிலை தற்போது எவ்வாறு உள்ளது ? என்பது தான். 

அவர் குறித்தும் அவரது உடல்நிலை குறித்தும் பல்வேறு அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் உலா வருகின்றன. இந்நிலையில் கிங் ஜோங் உன் இறந்தால் உலகம் அதை எவ்வாறு அறிந்து கொள்ளும் என்பது குறித்த செய்தி தொகுப்பு, இதோ!

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஒருவேளை இறந்துவிட்டால் அது குறித்து அந்நாட்டு செய்தியாளர் எவ்வாறு அறிவிப்பார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

சித்தரிக்கப்பட்டவை.

வடகொரியாவில் எந்த நிகழ்வுகள் நடந்தாலும் அதை அந்நாட்டு அரசு தொலைக்காட்சி மட்டுமே அறிவிக்கும். ஏனெனில் வட கொரியாவில் வேறு எந்த தொலைக்காட்சிகளுக்கும் அனுமதி கிடையாது. அரசு தொலைக்காட்சிக்கு மட்டுமே அனுமதி. ஒருவேளை அந்நாட்டு செய்தி வாசிப்பாளர் கருப்பு நிற உடையை அணிந்து கொண்டு செய்தி வாசித்தால் நாம் முடிவு செய்து கொள்ளலாம் ஏதோ ஒரு துக்க நிகழ்வு நடந்துள்ளது என்று. அப்பொழுது நாம் ஒரு முடிவுக்கு வரலாம் கிம் ஜோங் உன் இறந்துவிட்டார் என்று.

ALSO READ  இதுவரை கொரோனா பிடியில் சிக்காத உலகநாடுகள் எவை???

வடகொரியாவின் அரசு தொலைக்காட்சியில் பிரபல செய்தி வாசிப்பாளராக உள்ளவர் ரி சுன் ஹீ (Ri Chun Hee).

இவர் வட கொரிய தொலைக்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசிப்பாளராக உள்ளார் வடகொரிய முழுவதும் இவர் பிரபலம். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வடகொரியா சந்தித்த சோதனைகளையும் சோகங்களையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார் மகிழ்ச்சியான செய்தி என்றால் இவரது குரலில் தெரியும் ஒருவேளை துக்கமான செய்தி என்றால் அழுதுகொண்டே செய்தியை வாசிப்பார்.

வடகொரியா அணு ஆயுத சோதனை அல்லது ஏவுகணை சோதனை நடத்தினால் இவர் பிங்க் நிறத்தில் Joseon-Ot என்ற வட கொரியாவின் பாரம்பரிய உடையை அணிந்து கொண்டு செய்தி வாசிப்பார்.  இந்த உடை தென்கொரியாவில் Hanbok என்றழைக்கப்படும்.

கடந்த 2011 ஆம் ஆண்டு கிம் ஜோங் உன் தந்தை கிம் ஜோங் இல் மறைந்தார். அப்பொழுதும் சரி அதற்கு முன்னர் 1994 ஆம் ஆண்டு வட கொரியாவை நிறுவனரான கிம்மின் தாத்தாவும் கிம் ஜோங் இல்-ன் தந்தையுமான கிம் இல் சுங் மறைந்த போதும் இவர் கருப்பு நிற உடையை உடுத்திக் கொண்டுதான் செய்தி வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  முக்கிய ஆவணங்களில் கிம் கையெழுத்திட வில்லை... வடகொரியாவில் அதிகாரம் செலுத்தும் சகோதரி...
courtesy.

மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு கிம்மின் தந்தை கிம் ஜோங் இல் மறைந்த விஷயம் வெளியுலகிற்கு இரண்டு நாட்கள் கழித்து தான் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Left Kim Il Sung; Kim Jong Il

என தன் வடகொரியா அதிகாரபூர்வமாக கொரிய மக்கள் ஜனநாயக குடியரசு என்று (Democratic People’s Republic Of Korea) அழைக்கப்பட்டாலும் 1948 ஆம் ஆண்டு வட கொரிய நிறுவிய தினம் முதல் ஒரே குடும்பம்தான் ஆட்சி செய்து வருகிறது.

கிம்மின் தாத்தா கிம் இல் சுங் கொரியாவை ஆக்கிரமித்த ஜப்பான் நாட்டிற்கு எதிராக தொழிலாளர் கட்சியை துவங்கினார் அடுத்ததாக கொரிய யுத்தத்தின் போது அமெரிக்க ஐக்கிய நாடுகள் படைகளுக்கு எதிராகப் போராடினார் அதுமுதல் அவரது குடும்பம் மட்டுமே வடகொரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது ஒருவேளை இறந்தால் அவரது தங்கை கிம் யோ ஜோங் ஆட்சிக்கு வருவார் இவர்களை விட பல மடங்கு கொடூரத்தன்மை வாய்ந்தவர் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

Kim Yo Jong.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நம் வாழ்வை மாற்ற 5 டாப் தொழில்நுட்பங்கள்

Admin

நிவர் புயலுக்கும் மீம்ஸ்களை உருவாக்கி தெரிக்கவிடும் நெட்டிசன்கள் :

naveen santhakumar

மஞ்சள் தாலி கயிறின் பின்னால் இருக்கும் மகத்துவம்:

naveen santhakumar