ஜோதிடம்

திருப்பதி ஏழுமலையானை எவ்வாறு அழைக்க வேண்டும் தெரியுமா??? 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளிக்கக்கூடியவர் திருப்பதி ஏழுமலையான். அதனால்தான் திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நிகழும் என்று கூறுகிறார்கள்.

பொதுவாக எம்பெருமானை ‘நாராயணா’ என்று அழைத்தால் மிகவும் இஷ்டம். ஆனால் நம் ஏழுமலையானுக்கு நாராயணா என அழைத்தால் அதிகம் சந்தோஷம் இல்லையாம். சரி, அவரை வெங்கடாஜலபதி, சீனிவாசன் என்ற பெயர்களை சொல்லி அழைப்பதால், மகிழ்வாரா என்றால் அதில் கூட அவருக்கு  பெரிய விருப்பம் கிடையாதாம்.

சரி திருப்பதி ஏழுமலையானை எவ்வாறுதான் அழைப்பது. 

அவருக்கு மிகவும் பிடித்த பெயரான ‘கோவிந்தா’ என்று கூப்பிட்டால், கூப்பிட்ட குரலுக்கு திரும்பி பார்ப்பாராம் கோவிந்தர்.

இதற்கு காரணம் பூலோகத்தில் விஷ்ணு பகவான் அவதரித்திருந்த போது, அவர் ஆயர்களோடு மாடு மேய்க்கச் சென்றாராம். அப்போது அவரை ‘கோவிந்தா’ என அன்போடு ஆயர்கள் அழைத்தனர். அதுவே அவருக்கு பிடித்த பெயரானது. 

ALSO READ  மோடி - சீன அதிபரை வரவேற்று தமிழக அரசு சார்பில் பேனர் வைக்கலாம்

ஏனென்றால் உலகத்தில் பணக்கார கடவுளான பெருமாள் மாடு மேய்க்கும் போது மிக மிக எளிமையாக இருந்தார். அதோடு எளிமையானவர்களால் இந்த நாமத்தால் அழைக்கப்பட்டதால் மிகவும் விருப்பமான பெயரானது. இதனால் தான் திருமலை திருப்பதியில் எம்பெருமானை ‘கோவிந்தா’ என்ற நாமத்தை சொல்லி பக்தர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர்.

ALSO READ  ஆடி பிறப்பு - திருப்பதியில் கோலாகலம்: ஏழுமலையான் பக்தர்கள் உற்சாகம்!

இதன் காரணமாகத்தான் திருப்பதி திருமலை முழுவதும் ‘கோவிந்தா’ என்ற நாமம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான பெருமாள் கோயில்களில் பஜனைகளிலும் ‘கோவிந்தா’ நாமம் தான் சங்கீர்த்தனமக ஒலித்து வருகிறது.

வேலூர் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவன் கோவிந்தன் என்ற தாத்பர்யத்தை விளக்கும் வகையில் தான் கோவிந்தா என்ற நாமமும் ஏழுமலையானுக்கு விருப்பமானதாக உள்ளது. இந்த நாமம் வெளியூர் ஆல் அளிக்கப்பட்டது மேலும் எளியோருக்கு பிடித்தது என்பதால் கோவிந்தா என்ற நாமமே எம்பெருமானுக்கு மிக உகந்த பெயரானது.

கோவிந்த நாமசங்கீர்த்தனம்

கோவிந்தா… கோவிந்தா…


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

4 மொழிகளில் வெளியாகும் விஷாலின் ‘சக்ரா’… 

naveen santhakumar

மாசி மாத பலன்கள்…அதிர்ஷ்டசாலியான மிதுன ராசிக்காரர்களே…

Admin

டோல்கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க?

Admin