வணிகம்

எரிபொருள் தட்டுப்பாடு:வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசலின் அளவை அரசு நிர்ணயம் செய்துள்ளது…

ஐசவ்ல்(aizawl):

கொரோனா காலம் நம் வாழ்வின் பல பணிகளுக்கு எல்லைக்கோட்டை அமைத்துள்ளது . இதன் காரணமாக தற்போது எரிபொருளுக்கும் எல்லைக்கோட்டை அமைத்துவிட்டது.

மிசோரம் அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்கான வரம்பை நிர்ணயம் செய்துள்ளது. ஸ்கூட்டர் களுக்கு 3 லிட்டர் பைக்குகளுக்கு 5 லிட்டர் மற்றும் கார்களுக்கு 10 லிட்டர் என்ற  வரம்பை மிசோரம் அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்த வரம்பை விட மக்களுக்கு அதிகம் பெட்ரோல் கிடைக்காது.

ஒரு ஒரு மாக்ஸி கேப் பிக்கப் டிரக் மற்றும் மினி லாரி போன்ற வாகனங்களுக்கு 20 லிட்டர் டீசல் மற்றும் பேருந்துகளுக்கு 100 லிட்டர் என்றும் அறிவித்துள்ளனர்.

மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் மட்டுமே நிரப்பப்படும் ,என்றும் கேன் போன்ற மற்ற பொருட்களில் தரப்படமாட்டாது என்றும் மிசோரம் அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவித்துள்ளதால் மிசோரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களுக்கு எண்ணெய் டேங்கர்கள் செல்ல முடியாத காரணத்தினால், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் எரிபொருளை ஒரு குடும்பத்திற்கு இவ்வளவு என்று ஒரு அளவினை நிர்ணயித்து வழங்கலாம் என்று மிசோரம் அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கிட்டத்தட்ட ஒரே அளவில் உள்ளது .மற்ற இடங்களைவிட டெல்லியில் விலை மலிவாக காணப்படுகிறது. இந்த நேரத்தில் டீசலின் விலை ரூபாய் 70.56 மற்றும் மும்பையில் டீசலின் விலை ரூபாய்.80.11 டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.34 என்ற விலையில்

Related posts

வங்கிகளில் NEFT,RTGS,IMPS.. என்ன வித்தியாசம் தெரியுமா?

News Editor

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய Hyundai Aura

Admin

டாடா நிறுவனத்தின் புதிய கார் விற்பனை தேதி அறிவிப்பு

Admin