வணிகம்

ஏடிஎம் சென்றால் செல்போன் கட்டாயம்: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வரும் புத்தாண்டு முதல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இரவு 8 மணிக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்போனை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. சமீப காலமாக நூதன முறையில் பேங்க் அக்கவுண்டில் இருந்து திருடப்படும் பணத்தால் வாடிக்கையாளர்களுக்கும்- வங்கிகளுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்படுகிறது. இதனை தடுக்க வங்கிகளும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

ALSO READ  இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன…

இந்நிலையில் எஸ்பிஐ வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தங்களுடைய வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் எஸ்பிஐ ஏடிஎம்மில் வரும் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு முதல் இரவு 8 மணிக்கு பின் ரூபாய் 10 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுப்பதற்கு otp அவசியம் என்று தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ ஏடிஎம்-ல் நாம் டெபிட் கார்டை உள் நுழைத்து பணத்தை எடுப்பதற்கு முன் நமது செல்போனிற்கு otp வரும். அதனை பதிவிட்டால் மட்டுமே நம்மால் பணம் எடுக்க முடியும். ஆனால் இந்த அறிவிப்பு எஸ்பிஐ ஏ.டி.எம்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், இதர வங்கிகளின் ஏடிஎம்களில் உபயோகிக்கும்போது இதனை பயன்படுத்த தேவையில்லை எனவும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜிபி நிறுவனத்தை வாங்கியது பேஸ்புக் நிறுவனம்…

naveen santhakumar

தாய்லாந்தில் அறிமுகமாகும் ஹோண்டா சிட்டி கார்

Admin

பி.எஸ். 6 வாகனங்கள் – என்றால் என்ன?

naveen santhakumar