இந்தியா வணிகம்

ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை… அதிரடி கடன் திட்டத்தை அறிவித்த பேஸ்புக் இந்தியா!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆகஸ்ட் 20ம் தேதி முதல் சிறு, குறு நிறுவனங்களுக்கு தொழில்கடன்கள் கொடுக்கப்படும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது.

फेसबुक व्यवसायिकांना देणार तारणाशिवाय मोठं कर्ज !!! - पुढारी

கொரோனா பாதிப்பால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு துறைகளும் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்துள்ளன. குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தான் பலத்த அடிவாங்கியுள்ளன.

இதனால் முதலீட்டை போட்டு மீண்டும் தொழிலை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை சீர்செய்ய மத்திய அரசு உத்தரவாதத்துடன் கடன் வழங்க வழிவகை செய்துள்ளது. தற்போது தனியார் நிறுவனங்களும் முன்வந்துள்ளன.

இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அஜித் மோகன், இந்த கடன் திட்டம் குறித்து அறிவித்துள்ளார்.

ALSO READ  குடும்பத்தில் ஒருவருக்கு வேலை - ரெயில்வே துறை அறிவிப்பு
Facebook Launches Small Business Loans Initiative Across 200 Cities In  India For SMEs

சிறு, குறு வணிக நிறுவனங்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். 5 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் பயனர்களின் தகுதிக்கேற்ப வழங்கப்படவிருக்கிறது. ஆண்டுக்கு 17 முதல் 20 சதவீதம் வரையிலான வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது.

மகளிர் என்றால் 0.2% என்ற அளவில் வட்டி குறைக்கப்படும். இந்த திட்டம் முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 200 நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

ALSO READ  சிக்கிய நடன அழகி… திருடிய பணத்தை என்ன செய்தார் தெரியுமா?

இதற்காக ஃபேஸ்புக் 100 மில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கி, இந்தியா உள்ளிட்ட 30 நாடுகளில் செயல்படுத்தி வருகிறது. Indifi நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள பேஸ்புக், கடன் வழங்குவது மற்றும் வசூலிப்பதை அந்த நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.

டெல்லி, குர்கான், மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களுரு ஆகிய நகரங்களில் கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரம் சிறு குறு நிறுவனங்களுக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கியுள்ளது.

இதன் மூலம் சரிந்துள்ள பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பும் என்று பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அஜித் மோகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மகாகவி பாரதியார் நினைவு நாள் – பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

News Editor

இன்று நிகழ்கிறது 2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்

Admin

அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்த கிச்சா சுதீப்…. 

naveen santhakumar