வணிகம்

அன்றாட பயன்பாட்டிற்கு உதவும் சிலிண்டரின் விலை திடீர் உயர்வு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், மாதந்தோறும் 1ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.இந்நிலையில், நவம்பர் மாதத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக மானிய விலை சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதன்காரணமாக சென்னையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நவம்பர் மாதத்துக்கும் ரூ.610 ஆக நீடிக்கிறது. அதேநேரத்தில் டெல்லி, மும்பை ஆகிய பெருநகரங்களில் ரூ.594 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.620.50 ஆகவும் சமையல் எரிவாயு விலை நீடிக்கிறது.

ஆனால், கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.19 கிலோ எடைகொண்ட சிலிண்டர் விலை ரூ.78 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் அதன் விலை ரூ.1,354 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ  இந்தியா பொருளாதாரம் சில சவால்களை கண்டு வருவது உண்மைதான்

இதேபோல் டெல்லியிலும் வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து டெல்லியில் ரூ.1,241.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,296 ஆகவும், மும்பையில் ரூ.1,189.50 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தங்கத்தின் விலை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறதா????

naveen santhakumar

ரூ.1,63,300 கோடி காலி! ஆனாலும் வேலை உறுதி! நெகிழ வைக்கும் TCS…

naveen santhakumar

கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவது எப்படி?

News Editor