வணிகம்

தங்கத்தின் விலை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறதா????

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் குறைய தொடங்கி உள்ளது. தற்போது ஆபரண தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை உயர தொடங்கியுள்ளது.

கடந்த மாதத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 37 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,948 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ.39,584 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும்,24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,198 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ.41,584 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

ஜியோ’ல அன்லிமிடெட் கால் வசதி … எப்படி பெறுவது தெரியுமா?

Admin

huawe நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

Admin

ராயபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க்கில் புகுந்த கார்

Admin