வணிகம்

நகை வாங்க சூப்பர் சான்ஸ்… தொடர்ந்து குறையும் விலை…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,585-க்கும், சவரன் ரூ.36,680க்கும் விற்பனை ஆகிறது. 

மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோல், நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து, சவரன் ரூ.37,000க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,635க்கு விற்பனையானது, சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.76.60க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிந்திருப்பது  நடுதர வர்கத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ALSO READ  அலட்சியப் போக்கால் தங்க நகைகளை குப்பையில் வீசிய பெண் :

இந்த வருடம் தொடக்கம் முதலே விலை ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் விலை கண்ணாமூச்சி ஆடி வருகிறது. 

கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டிருந்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறையவே இல்லை. 

கடந்த மாதங்களில் ஒரு சவரண் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது குறிப்பிடதக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரிசி ஏற்றுமதி: இந்தியா – சீனா போட்டி

Admin

சிவகாசியில் பல மொழிகளில் 2020 ஆண்டிற்கான தினசரி காலண்டர் தயாரிப்பு

Admin

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய Hyundai Aura

Admin