இந்தியா வணிகம்

இந்தியாவிற்கு 75,000 கோடி சுந்தர் பிச்சை அறிவிப்பு… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவிடும் வகையில் கூகுள் இந்தியா சார்பில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்திய மதிப்பில் சுமார் ரூ.75 ஆயிரம் கோடி) வழங்கப்படும் என்று சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவில் 10 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இன்று காலை கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில், வேலை சூழலில் கரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், மற்றும் தகவல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

2020-ம் ஆண்டுக்கான ‘கூகுள் ஃபார் இந்தியா’ நிகழ்ச்சியில் இன்று பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவின் எதிர்காலம் மற்றும் அதன் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த தங்கள் நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த முதலீடுகள் செய்யப்படுவதாக சுந்தர் பிச்சை கூறியுள்ளார். 

ALSO READ  கொரோனா வைரஸ் நீங்க சிறுமியின் நாக்கை வெட்டி கோவிலுக்கு காணிக்கையாக்கிய பூசாரி..!!! நடந்தது என்ன??...

இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த முதலீடுகள் செய்யப்படுகின்றன. அதே போல் சுகாதாரம், கல்வி, வேளாண்மை உள்ளிட்ட முக்கிய துறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகிய காரணங்களை அடிப்படையாக கொண்டும் முதலீடு செய்யப்படுகிறது. இதன்மூலம் இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்றாற்போல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளையும் கூகுள் வழங்கவுள்ளது. 

உலக மக்கள் தொகையில் 2வது இடத்தை பிடித்துள்ள இந்தியாவில் 500 மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். அதனால் இந்தியர்களுக்கு இணைய சேவையை பயனுள்ளதாக்கும் நடவடிக்கைகளில் கூகுள் ஈடுபடும் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் குரல் உள்ளீடு உள்ளிட்ட அம்சங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

ALSO READ  3வது அலையா??- உ.பி.ல் மர்ம காய்ச்சல் 40க்கும் மேற்பட்டோர்  உயிரிழப்பு…!

டிஜிட்டல் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலான முதலீடுகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளன. அந்த வகையில் பேஸ்புக் நிறுவனம், இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்திருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா வந்த ஜெஃப் பெசோஸ், அமேசான் நிறுவனம், இந்தியாவில் கூடுதலாக 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் சுந்தர் “பிச்சை” அல்ல வள்ளல் என நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Clams Casino qo’shiqlari, qo’shiqlari va albomlari

Shobika

ஒருவழியாக கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி!

News Editor

ஜனவரி முதல் அமலுக்கு வந்த வங்கி முறையின் புதிய மாற்றங்கள்

Admin