வணிகம்

அதிக வட்டியுடன் இனி செல்போனிலேயே ஃபிக்சட் டெபாசிட்- கூகுள் பே-வின் அசத்தல் அறிவிப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இதுவரை வங்கியில் மட்டுமே பொதுமக்கள் டெபாசிட் செய்து வந்த நிலையில் இனிமேல் செல்போனிலேயே செய்யலாம் என்று கூகுள் பே செயலி அறிவித்துள்ளது.

Google Pay launches digital FD in tie-up with Equitas Small Finance Bank

இன்றைய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் நிதி சார்ந்த சேவைகள் செல்போன் மூலமாகவே செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக பல செயலிகள் பயன்பாட்டில் இருப்பினும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துவது கூகுள் பே (google pay) செயலி. இதன் மூலம் அனைத்து பண பரிவர்த்தனைகளையும் செய்ய முடியும்.

இந்நிலையில், கூகுள் பே “ஃபிக்ஸட் டெபாசிட்” சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் (Equitas Small Finance Bank) என்னும் வங்கியுடன் கைகோர்த்துள்ளது. பொதுவாக ஃபிக்ஸட் டெபாசிட் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட தொகையை செலுத்திவிட்டால் அதற்கான வட்டியை வங்கி நமக்கு தரும். இதற்கு வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருப்பது அவசியம்.

ALSO READ  இன்று முதல்... ஏடிஎம் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ஆனால் வங்கிக் கணக்கு இல்லாமலேயே ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு செய்ய முடியும் என கூகுள் பே தற்போது அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், வங்கிகளில் கிடைக்கும் சராசரியான வட்டியை காட்டிலும் அதிக வட்டி வழங்கப்படும் என்றும் செல்போன் மூலமாகவே வாடிக்கையாளர்கள் இதை ஈசியாக செய்து விடலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Google Pay to allow users to open fixed deposits on its platform | Business  Standard News

இந்த சேவையை பயன்படுத்த விரும்புவோர் கூகுள் பிளே ஆப்-ஐ டவுன்லோட் செய்து அதில் ‘Business and Bills’ ஆப்ஷனில் ‘Equitas Bank’ஐ தேர்வு செய்ய வேண்டும். அதில் தொகையை செலுத்தி கால அவகாசம் உள்ளிட்ட அனைத்தையும் பூர்த்தி செய்தால் உங்கள் பணத்திற்கான பட்டி உங்கள் வங்கி கணக்கிற்கு நேரடியாக வந்து சேரும்.

ALSO READ  சேமிப்பு கணக்கில் ரூ.500 இருப்பு கட்டாயம்-அஞ்சல்துறை உத்தரவு

அனைத்து விபரங்களையும் கூகுள் பிளே ஆப் மூலமாகவே டிராக் செய்ய முடியும். இந்த திட்டத்திற்கு எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி 6.35% வட்டி வழங்குவதாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவிற்கு 75,000 கோடி சுந்தர் பிச்சை அறிவிப்பு… 

naveen santhakumar

நல்ல செய்தி!: ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு..!

naveen santhakumar

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடி ரூபாய் கடன்- ரிசர்வ் வங்கி

naveen santhakumar