வணிகம்

ஜியோவின் அதிரடி ஆஃபர்!! ஐந்து மாதங்களுக்கு டேட்டா இலவசம்:

சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிரடி ஆபர் ஆக ஜியோ நிறுவனம் ஐந்து மாதங்களுக்கு இலவச டேட்டா மற்றும் குரல் அழைப்புகளை வழங்கியுள்ளது.

தனது சேவையை தொடங்கியதிலிருந்தே பல்வேறு விதமான சலுகைகளை வாடிக்கையாளருக்கு ஜியோ நிறுவனம் வழங்கியுள்ளது. அதன் காரணமாக  பலரும் ஜியோ வாடிக்கையாளராக மாறினர். ஜியோ வந்ததிலிருந்து பல நெட்வொர்க் நிறுவனங்கள்  அந்தரத்தில் தொங்கும் நிலமையானது.

களத்தில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டியாக இருந்தாலும் அனைத்தையும் அடித்து துவைத்து துவம்சம் செய்து முன்னேறி தனது அரிய சலுகைகளால் அனைவரையும் தன்னகத்தே ஜியோ நிறுவனம் கொண்டுள்ளது.

சமீபத்தில் கூட ஃபேஸ்புக் நிறுவனம் ஜியோவில் 9.99 % முதலீடு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மேலும் வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு ஜியோ நிறுவனம் சுதந்திர தின ஆஃபராக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில் 1,999 ரூபாய்க்கு ஜியோஃபை ஹாட்ஸ்பாட் கிடைக்கிறது அதனை வாங்கும் பொழுது ஐந்து மாத இலவச டேட்டா உடன் ஜியோ டூ ஜியோ நெட்வொர்குக்கு இலவச குரல் அழைப்பும் வழங்கப்படுகிறது.

ஜியோஃபை ஹாட்ஸ்பாட் உடன் மூன்று ஆஃபர்கள் வழங்கப்படுகிறது. அதில், நாம் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். ரிலையன்ஸ்  ஸ்டோரில் ஜியோஃபை வாங்கியவுடன் ஜியோ சிம் ஆக்டிவேட் செய்யப்படும். அதனை அடுத்து ஒரு மணி நேரத்தில் டேட்டாவை உபயோகப்படுத்தலாம். 

மை ஜியோ(MY JIO) ஆப் மூலம் டேட்டா மற்றும் குரல் அழைப்பு குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இத்தகைய ஜியோ 5 ஹாட்ஸ்பாட் ரூ. 199 முதல் ஆரம்பமாகிறது. இதனுடன் 28 நாள் வேலிடிட்டியுடன் இலவச டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த 199 ரூபாய் உடன் 99 ரூபாய் சேர்த்து செலுத்தினால், ஜியோ பிரைம் சந்தாதாரராகவும் மாற முடியும்.

Related posts

அரிசி ஏற்றுமதி: இந்தியா – சீனா போட்டி

Admin

YES BANK இனி NO BANK- கடன் சுமையில் தத்தளிக்கும் யெஸ் பேங்கை கட்டுப்பாட்டில் எடுத்தது ரிசர்வ் வங்கி..!

naveen santhakumar

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2020 -21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார்.

naveen santhakumar