இந்தியா வணிகம்

ஆகஸ்ட் 31 வரை கடன் தவணை செலுத்த அவகாசம் நீட்டிப்பு- ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்…. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலையில், மாதத் தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 4.4 % லிருந்து 4% ஆக குறைக்கப்படுகிறது. குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 % குறைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகள் பாதிப்பை சந்தித்துள்ளன. 

உலக பொருளாதாரம் 13 சதவீதம் முதல் 32 சதவீதம் வரை சுருங்கக்கூடும். உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வேளாண் துறை வளர்ச்சி, நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. மானாவாரி சாகுபடி 44 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் பருப்புகளின் விலை அதிகரிக்கலாம். உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. 

ALSO READ  Mostbet Uzbekistan Официальный Сайт Спортивных Ставок И Онлайн-казино Uz 20

ஏப்ரல் மாதம் உணவு பொருட்களின் பண வீக்கம் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் வரிவசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை உற்பத்தி மார்ச்சில் 17 சதவீதம் குறைந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும். ஜிடிபி சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படும் சூழ்நிலை இந்தாண்டு இல்லை.

சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பிரச்னையை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதி பிரச்னையை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை வசதியில் கடன் வசதி அளிக்கப்படும். 

ALSO READ  சரிந்த பொருளாதாரத்தை சரிகட்ட ரிசர்வ் வங்கி அதிரடி....

சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 487 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி (Forex) கையிருப்பில் உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால், பொருளாதார செயல்பாடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. அதனையடுத்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் வங்கிக் கடன் தவணை ஒத்திவைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கு வங்கிக் கடன் தவனை கட்டுவதற்கு ஒத்திவைக்க அனுமதியளிக்கப்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காங்கிரஸ் கவுன்சிலரின் கண்டுபிடிப்பு: ரம்முடன் தினமும் ஆம்லேட் போதும் கொரோனா ஓடிவிடும்… 

naveen santhakumar

ஒற்றை வார்த்தையால் ஆத்திரமடைந்து மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்…

naveen santhakumar

1win Aviator Game Down Load Apk For Free Play Online Inside Indi

Shobika