இந்தியா வணிகம்

வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த எஸ்.பி.ஐ…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

S.B.I வங்கி நாடு முழுவதும் 21,959 கிளைகளை வைத்துள்ளது. இதில் 31 லட்சம் கோடி ரூபாயை 44.51 கோடி வாடிக்கையாளர்கள் இந்த வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர். இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் தங்களது கணக்கில் குறிப்பிட்ட அளவு தொகையை (Minimum Balance) இருப்பாக வைக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு தொகை இல்லாத கணக்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இதற்கு GST வேறு சேர்த்து விதிக்கப்படும்.

மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்போர் குறைந்தபட்சமாக ரூ.3000 மினிமம் பேலன்ஸாக வைத்திருக்க வேண்டும். புறநகர் பகுதிகளில் 2000-ம், கிராமப்பகுதியில் ஆயிரமும் மினிமம் பேலன்ஸ் ஆக வைத்திருக்க வேண்டும். மாதந்தோறும் மினிமம் பேலன்ஸ் குறைந்தால் விதிக்கப்படும் அபராதத்தொகை தொடர்பாக S.B.I வங்கி மீது வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

ALSO READ  குறைந்த விலையில் ரியல்மி 5S ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்நிலையில் சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்காவிடில், அபராதம் விதிக்கப்படாது என வங்கி இன்று அறிவித்துள்ளது.

இது குறித்து SBI தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறுகையில்:-

இந்த அறிவிப்பு S.B.I வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும். நாங்கள் AMB-ஐ (Average Monthly Balance) தள்ளுபடி செய்கிறோம். இதனால் SBI வாடிக்கையாளர்களுக்கு SBI மீதான அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என அவர் கூறினார்.

ALSO READ  இனி ரூ.2000 கிடையாது - ரிசர்வ் வங்கி அடுத்த அதிரடி

இதுமட்டுமல்லாமல், S.M.S சேவைக்கான கட்டணத்தையும் S.B.I ரத்து செய்துள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு பிப்ரவரி 1ம் தேதி தூக்கு

Admin

Pin Up Azərbaycanın ən yaxşı kazinosu Rəsmi sayt Real pulla oynayı

Shobika

ஜூன் 15 வரை ஊரடங்கை நீட்டித்தது மகாராஷ்டிரா அரசு !

News Editor