இந்தியா வணிகம்

கொரோனா: எந்த வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கலாம் 3 மாதங்களுக்கு கட்டணம் இல்லை- நிர்மலா சீதாராமன்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடெங்கும் தொழில்துறை ஸ்தம்பித்துள்ளது. பல்வேறு வர்த்தக நிறுவனங்கள்  தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதித்துள்ளது.

மிகவும் இக்கட்டான இந்த பொருளாதார சூழலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை வரும் மார்ச் 31-ம் தேதியிலிருந்து ஜூன் 30-ம் தேதியாக (மூன்று மாதங்களுக்கு) நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதேபோல் வட்டி விகிதம் 12 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி டெபிட் கார்டு மூலம் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும்போது, எந்த வங்கி ATM கார்டையும் பயன்படுத்தியும் எந்த வங்கி ATMகளில் இருந்தும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா சென்றார், மேலும் தனது தந்தை குறித்த தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று அவரின் மகன் கோரிக்கை:

ஏனெனில் 5 முறைக்கு மேல் மற்ற வங்கி ATMகளில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கின்றது. சில வங்கிகளில் இந்த அபராதம் 100 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜூன் 30-ம் தேதி வரை எந்த வங்கி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுத்தாலும் கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  ஃபோர்டு நிறுவனம் இந்தியாவிற்கு டாடா சொல்கிறது

அதேபோல வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை குறைவாக இருக்கும்பட்சத்தில் பிடிக்கப்படும் அபராதத் தொகைகள் எதுவும் பிடிக்காது என்றும் அறிவித்தார் ஏற்கனவே நாட்டின் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இந்த குறைந்தபட்ச இருப்பு தொகை கன அபராதத்தை நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேதி மார்ச் 31 இல் இருந்து ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

மேலும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கான ஜிஎஸ்டி வரி ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

6 முதல் 8 வாரத்தில் கொரோனா 3வது அலை தாக்கும்- எய்ம்ஸ் எச்சரிக்கை…!

naveen santhakumar

உலகிலேயே மலைப்பகுதியில் போரிடுவதில் சிறந்த அனுபவம் வாய்ந்தது இந்திய ராணுவம் மிகவும்-சீன ராணுவ நிபுணர்.. 

naveen santhakumar

நீதிபதி முரளிதரும் அவரது அதிரடி தீர்ப்புகளும்..!!!!

naveen santhakumar