சினிமா

ஆளவந்தான் தான் ஜோக்கர்-க்கு இன்ஸ்பிரேஷன்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

92 வது ஆஸ்கர் விழாவில் அனைவரின் கணிப்புகளையும் மீறி பல்வேறு படங்களை தாண்டி தென் கொரியப் படமான பாராசைட் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதையும் சிறந்த இயக்குனருக்கான விருதையும் வென்றுள்ளது.

இந்நிலையில் நமது தமிழகத்தில் நெட்டிசன்கள் இந்த படம் 1999 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மின்சார கண்ணா’ படத்தின் காப்பி; இன்ஸ்பிரேஷன் என்று இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, அட போங்கப்பா ஜோக்கர்-2019 படமே எங்க ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவரின்’ ஆளவந்தான் படம்தான் என்று மறுபுறம் இணையத்தில் தெறிக்க விடுகின்றனர் கமலஹாசனின் ரசிகர்கள்.

ALSO READ  உறுதியானது "மக்கள் நீதி மையம் - ஆம் ஆத்மி" கட்சி கூட்டணி..!

2001ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமலஹாசன் இரு வேடங்களில் நடித்து வெளிவந்த ‘சைக்கோ த்ரிலலர்’ படம் ஆளவந்தான்.

இத்திரைப்படத்தின் காட்சிகள் ஃபேரேம் பை ஃபேரேம் ஜோக்கரில் உள்ளதென ஆதாரத்தோடு காட்டுகிறார்கள் கமல் ராணுவத்தினர் அதாங்க கமல் ஆர்மி.

எது எப்படியோ நம்மவர் ‘உலக நாயகன்’ தான். நம்மவர் பின்னால் நிகழ்வதை முன்பே தன் படங்களில் கூறியவர். சுனாமி குறித்து ‘அன்பே சிவத்திலும்’ இன்றைய வைரஸ் தாக்குதல்கள் குறித்து ‘தசாவதாரத்திலும் கூறியவர் நம்மவர் ‘ஆழ்வார்பேட்ட ஆண்டவர்’ என்கிறார்கள் நெட்டிசன்கள்

ALSO READ  இந்திய சினிமாவின் முடிசூடா மன்னன் கே.பி….. 

ஏற்கனவே ஆளவந்தான் படத்தில் வந்த அனிமேஷன் சண்டைகாட்சியை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு தனது படமான ‘கில் பில்’ படத்தில் வைத்தேன் என ஹாலிவுட் இயக்குநர் க்வென்டின் டரூன்டினோ (Quentin Tarantino) ஒருமுறை பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப்பிடம் கூறினார் என்பது குறிப்பிடதக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகை “நயன்தாராவை” காண பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு 

News Editor

திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த விமலின் மனைவி !

News Editor

படப்பிடிப்பின் போது விபத்து- நடிகர் அருண் விஜய்க்கு காயம்

naveen santhakumar